உந்த படம் ஜீனோ ஜப்பான் போனப்ப,அயகா ஹேர்கட் பண்ணிட்டு,ஜப்பான் ட்ரெஸ் போட்டுக்கினு எடுத்த படம்.எப்பூடி? படம்எப்பூடி?? சும்மா அதிருதுல்ல?ஜீனோஸ் கோர்னொர் ஓபன் பண்ணப்போ,வாரமொருமுறை டீ ஆத்திய ஜீனோ, அப்பூடியே கழுதை தேய்ஞ்சி கட்டெறும்பு ஆன ஸ்டொரியா இப்பம் ஒன் மந்த் கழிச்சி வந்திருக்கு. அல்லாரும் நலம்தானே?
சொம்மா ஒரு மொக்க போடலாமேன்னு இந்த போஸ்டிங். வயக்கம் போல அல்லாரும் வாங்கோ,படிங்கோ & சிரிங்கோ!
************

ஒரு ப்ளைட்லே சர்தார் போயிக்கினு இருக்க சொல்லோ,பக்கத்துக்கு சீட்ல ஒரு மேதாவி பார்ட்டி குந்திக்கினு வருது. சர்தார்ஜி-க்கு ஒரே தூக்கம்,ஆனா அந்த மேதாவி நை-நைன்னு தொணதொணத்துகிட்டே வருது.
மேதாவி: ஒரு கேம் வெளாடலாம்..நான் கொஸ்டின் கேக்குறேன்,உனக்கு பதில் தெர்லைன்னா நீ $50 குடு..அப்புறம் நீ கொச்டிநேகேளு..எனக்கு தெர்லைன்னா நான் $50 தரேன்.
சர்தார்:நோ,நோ..எனக்கு தூக்கம் வருது,நான் தூங்கப் போறேன்.டோன்ட் டிஸ்டர்ப் மீ!
சிறிது நேரம் கழிந்த பின்னர்
மேதாவி: சர்தார்,கேமை மாத்திட்டேன்..உனக்கு பதில் தெர்லைன்னா நீ $50 குடு..எனக்கு தெர்லைன்னா நான் $5000 தரேன்.
சர்தார்ஜி சந்தோஷமா ஒத்துகிட்டாரு..பர்ஸ்ட் மேதாவி கேள்வி கேட்டாரு.
மேதாவி: "பூமிக்கும், நிலவுக்கும் இடையில் உள்ள தூரம் என்ன?"
சர்தார்: ஆப்டர் டு மினிட்ஸ் சைலன்ஸ்,சர்தார் பர்ஸ்ல இருந்து $50 எடுத்து மேதாவிக்கு தந்துட்டார்..நெக்ஸ்ட் சர்தார் டைம்.
சர்தார்: மலை மேலே ஏறும்போது மூணு காலோட இருக்கும்,இறங்கும்போது நாலு காலா வரும்..அது என்ன?
மேதாவி: ப்ரெண்ட்ஸ்-க்கு போன் போட்டாரு..இன்டர்நெட்டுல தேடினார்..என்னா பண்ணாலும் ஆன்சர் தெர்ல..செக் புக் எடுத்து $5000 -க்கு செக் எழுதி சர்தார்க்கு குடுத்து, என்ன பதிலுன்னு நீயே சொல்லிடுன்னு கேட்டாரு.
சர்தார் திரும்பியும் அமைதியா பர்ஸ்-ல இருந்து இன்னொரு $50 பில் எடுத்து மேதாவிக்கு கொடுத்தார்.
மேதாவிக்கு எப்பூடி இருந்திருக்கும்??!! ஹா..ஹா..ஆஆ!!
ஓக்கை கய்ஸ்..அப்றமா மீட் பண்ணுவம்..சீயா..மீயா!!






















