May 26, 2010

Why One is 1 & Two is 2??


மக்கள்ஸ்,ஒய் ஒன் இஸ் 1 அண்ட் டு இஸ் 2 ? எப்பமாவது இப்பூடி ஜீனோ மாரி:) இன்டெலிஜென்ட்டா திங்க் பண்ணிருக்கீங்கள்? தேர் இஸ் எ மீனிங் பிஹைன்ட் எவரிதிங்,ரைட்?
ஸோ, அது என்ன ஏதுன்னு இன்றைய கிளாஸ்ல ஜீனோ வாத்தியார் உங்கள் அல்லாத்துக்கும் விளக்கமான லெக்ச்சர் தரார்..ஒயுங்கா,கவனமா படிக்கோணும்,ஓக்கை?

இந்த நம்பர்ஸ் அல்லாத்துக்கும் பேஸ்-ஆக ஒரு அரபிக் அல்காரிதம் இருக்கு. அது ஏன் அரபிக் அல்காரிதம் எண்டு கேக்கக்கூடாதூ..கர்..ர்ர்..ர்ர்ர்ர்!

எப்புடியும் எல்ஸ் மாரி ஒரு சிலர் கேக்கதான் செய்வாங்கள்..ஸோ ஜீனோ இஸ் டெல்லிங் தி ஆன்சர் யா..மின்னாடியே ஒரு ரோமன் அல்காரிதம் இருக்குல்ல? ச்சு,அதான் நம்ம இஸ்கூல் படிக்கும்போது, நோட்டு-புக்குல அல்லாம் நம்ம பேரைப் பொன்னெழுத்துல பொரிக்கிறதா நெனைச்சி கலர்,கலர் ஸ்கெச் பேனா வைச்சு விளம்பி, அந்தப் பேருக்குக் கீழ II STD-B அப்பூடின்னு எழுதுவமில்ல? அந்த I, II, III,IV,V,VI,VII தான்..அது ரோமன் அல்காரிதம்..ஸோ,இது அரபிக் அல்காரிதம்,ஓக்கை?

இந்த அல்காரிதம்-ஐ உருவாக்கினது அரபி'ஸ் இல்லை..ஆனா பாருங்கோ, இதை பிரபலப் படுத்தினது அவிங்கதான்..அல்காரிதம் ஹிஸ்டரி பாத்தா அதுக்கும் பின்னாடிலாம் போகும்..நமக்கெதுக்கு அதுல்லாம்? ஸ்ரெயிட்டா மேட்டருக்கு போயிருவம்!

அப்பூடி இன்னாதான் லாஜிக் இருக்கு இந்த அரபிக் அல்காரிதம்னா..சரி,போட்டோவையே போட்டுடுவம்..நூறு வரிகள் சொல்வதை ஒரு புகைப்படம் சொல்லிடுமாமே? பாருங்கோ..


நம்ம எப்பவுமே பரிச்சை பேப்பர்ல அல்லாம் தவறாம வாங்கி, வாத்தியாரை கோழி ஆக்குவமே,அந்த நம்பர் மிஸ் ஆகுது தான? உட்டுடுவமா என்ன? இங்கயும் வாங்கிற மாட்டம்?

இந்தப் பதிவைப் படிக்கும் அல்லாருக்கும் ஜீனோ வாத்தியார் தாராள மனதுடன்,ஏராளமான முட்டைகளை வாரி வழங்குகிறாஆ..ஆ..ஆ..ஆர்! அல்லாரும் வந்து சாப்புடுங்கோ..அதாரது அ.கோ.மு.-தான் வேணும் எண்டு கூச்சலிட்டு அழுவது?

பேபி அதிரா சிஸ்டரோ? அயுவாதீங்கோ சிஸ்டர்..உங்களுக்கு பெஷல் அ.கோ.மு. தம்பி தருவர்..அப்பூடி கடேசி பெஞ்சில ஓரமா போய் உக்காருங்கோ..ஓக்கை?

கதை உணர்த்தும் நீதி: It is Never Late to Learn!

தோடா..தாரா வைச்சி ஜீனோவத் துரத்தறாங்க..தாரா ஃபேஸ்ல ஜொலிக்கிற கோவத்தைப் பாத்தா பயம்..ம்ம்ம்...மா இர்க்கே!! நீந்து ஜீனோ,நீந்து..கரை பக்கம்தாஆ..ஆ...ஆன்! எஸ்..ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்!!

May 19, 2010

தாராவும்-பூஸும்-ஜீனோவும்!

//தாரா, வான்கோழி இப்படிப் பறவையெல்லாம் இல்லையோ ???//...ஹூம்..எதுக்கு பூஸார் இப்பூடி அக்கறையா கேக்கிறார்?

பாத்தீங்களா மக்கள்ஸ்? அப்பாவியாய்க் கேக்கும் டக்ளிங்க்ஸ்..விவகாரமாய் திங்க் செய்யும் பூ..ஸ்ஸ்..ஸ்ஸ்!

டக்ஸ்: ம்ம்...ஹ்ம்ம்..உடாத மாமே..பூஸ சட்னி ஆக்கிருவம்..நம்மள சாப்ட பிளான் போடுமா? குர்ர்..பக்..பக்..பக்!
ஜீனோ: பூஸ் டக்-ஐத் தின்னுமா..இல்ல டக்கு பூஸைத் தின்னுமா?? :))))

தோடா..புஸ்ஸுன்னு போச்சே..அல்லாரும் பிரெண்ட்ஸ் ஆயிட்டாங்கபா! சரி..நம்மளும் டக்ஸ் கூடோ ஒரு ஸ்னாப் எடுத்துக்குவம்..வேற வழி??!!!

டக்கு-பூஸ் சண்டைய எக்ஸ்பெக்ட் பண்ணி ஏமாந்து போனதுல மூக்கு கொஞ்சம் உடஞ்சி போச்சு பா...அவசரமா ரிப்பேர் பண்ணிட்டு ஜீனோ போஸ் குடுத்திருக்கு. எப்பூடி?? ஜீனோ இஸ் ஆல்வேஸ் க்யூட் தான?

வான்ட் டு ஸீ மோர் போட்டோஸ்? இங்க வாங்கோ..ஓ!

May 17, 2010

பறவைகள் பலவிதம்..

//இதைப்பார்க்கும் உங்களில் யாருக்காவது தைரியம்:) இருந்தால், பறவைகள், விலங்குகள்... படங்களை நீங்களே.. எடுத்து தொடர் பகுதியாக தொடருங்கள் எனக்கேட்டுக்கொள்கிறேன்...//
எங்களுக்கு தைரியம் ரெம்ப இருக்குது அதிராக்கா..உங்க போட்டோஸ்,ஆன்ரீ போட்டோஸ் அளவுக்கு ஜீனோட்ட சரக்கு இல்ல..பட், இருக்கிறத கடை பரப்புது..எப்பூடி இருக்குன்னு சொல்லுங்கோ படீஸ்..சகோஸ் & மகோஸ்!
----------------------------
தீஸ் போட்டோஸ் டேக்கன் லாஸ்ட் இயர்..இன் ஒன் பியூட்டிபுல் ஓஷீன்!


ஸூ..ஸூ..டொப்பி பத்ரம் படீ..அந்த கடல் நாரை தூக்கிட்டு போகோ பாக்குதூ...

தீஸ் போட்டோஸ் டேக்கன் லாஸ்ட் இயர்..இன் எ பியூட்டிபுல் லேக்.

கோச்சுகினு நடை பழகும் நாரை..கடல் நாரை..
இது எந்த காட்டுல/எந்த தண்ணில சுட்டதுன்னு ஜீனோ மறந்து போயிடுச்சி..ஹி,ஹி!!

இந்தப் படத்தை ஜூம் செய்து பாருங்கோ படீஸ்..சன் செட்டிலே சூரியனுடன் பேசிக்கொண்டிருக்கும் ஒரு குட்டிப் பறவையார் இருக்கிறார் படத்திலே..இப்போதைக்கு இவ்ளோதான்..ஹார்ட்ரைவ்-ல தேடித் பாத்து உன்னும் போட்டோ இருந்தா ஜீனோ அப்லோட் பண்ணும்..ஓக்கை படீஸ்? எஞ்சா..ஆ...ஆ..ஆ..ஆ..ய்!

May 14, 2010

விழுஞாயிறு...இன் ஜீனோஸ் லேண்ட்!

ஹலோ படீஸ்..அதிராக்காவிண்ட அன்பு வேண்டுகோளுக்கு இணங்க ஜீனோவும் தன் கமரா கண்ணாலை சூட் செய்த விழுஞாயிறின் படங்கள்...பார்த்து ரசியுங்கோ!

அது ஒரு பொன்மாலைப் பொழுது...பைன் மரத்தின் பின்னணியில் மறையும் கதிரவன்..

ம்ம்..இப்பம் ஜீனோ வேற பிளேஸ்,வேற பொஷிஷன்லே க்ளிக் பண்ணிருக்கு..

அயகான ஆரஞ்சுப் பழம் ஒன்று மலைகளின் மடியில் சரிந்து உறங்கச் செல்கிறது..:) :)

இது ஜீனோ வீட்டருகே அனுதினமும் காலையில் வந்து,மாலையில் மறையும் சூரியன் பிள்ளை..

ஜீனோ வில் கம் சூன்..வித் தாரா ஸ்நாப்ஸ்..அதுவரை எல்லாரும் பத்திரமா இருங்கோ! ஸீ..யா...மீ..யா!!

May 6, 2010

ஒரு டிஸ்கஷன்

மக்கள்ஸ் அல்லாரும் சுகமோ?
ஜீனோஸ் கோர்னர்ல டீ ஆத்தி ரொம்போ நாள் ஆயிடுச்சி..அதான் எதுனா எயுதலாம்னு வந்தா.."காலி-காலி,மேல் மாடி காலி"..மூளை எம்ப்ட்டியா இருக்கு. இன்னா எயுதரதுனே தெர்ல. ஆனா எயுதாம உட்டா அல்லாரும் ஜீனோஸ் கொர்னர் வரமாட்டாங்கோ..ஸோ ஜீனோ எயுத்தானிய கூர் தீட்டிக்கொண்டு "சீத்தலை சாத்தனார்" ரேஞ்சுக்கு திங்க் பண்ணுது! (ஹோப் யூ படீஸ் நோ தட் ஸ்டோரி :) )

நேத்திக்கு ப்ரெண்ட்ஸ் கூடோ ஒரு டிஸ்கஷன்(கல்ஸ் பண்ணா அது அரட்டை கண்ணா..பாய்ஸ் பண்ணா தட் இஸ் இம்பார்டன்ட் டிஸ்கஷன். ;) ). அப்போ ஒருவர் பின்வருமாறு சொன்னார். கரீக்டுப்பா..இன்னா மாரி அப்சர்வ் பண்ணிக்கிறாரு பாருங்கோ.

####
"ரிச்சா,ஒல்லியா,ஹேப்பியா இருக்கற மனுஷங்கள பாக்கவே முடியாது"

*ரிச்சா ஒல்லியா இருக்கற ஒரு ஆள் கண்டிப்பா ஹேப்பியா இருக்க மாட்டாராம். எதுனா கவலைப் பட்டுதான் அப்பூடி ஒல்லியா இருப்பாராம்.

*ஒல்லியா,ஹேப்பியா இருக்கற ஆள் ரிச்சா இருக்க மாட்டாராம்.
*ரிச்சா,ஹேப்பியா இருக்கற ஆள் குண்டா இருப்பாராம்..ஹெல்த்தியா இருக்க மாட்டாராம்..ஸோ,ஹேப்பியாவும் இருக்க மாட்டாராம்.


###
யப்பா..இதுக்கு மேல மொக்க போட்டு தலைய புண்ணாக்கிக்க ஜீனோக்கு இஷ்டம் இல்ல பா..நிப்பாட்டிக்குவம். பொறுமையா இத்த படிச்சீங்கோ..அப்பூடியே ரிலாக்ஸ்டா சில போட்டோஸ் பார்த்துட்டு ஜாலியா சிரிச்சுக்கினே இருங்கோ.
-----------------------------------------------------------------------------------------

வாட் ஹெப்பென்ட் அதிராக்கா?? கூல் டவுன்..அட்லீஸ்ட்,சிட் டவுன் பண்ண சொல்லுங்கோ.

அலப்பறைய பாருங்கோ மக்கள்ஸ்..பீ வேர் ஆப் கேட்ஸ்..ஸ்ஸ்..ஸ்ஸ்..ஸ்!

தோடா...இன்னாமா ஒரு ராயல் லுக்கு பாருங்கோ!


ஒற்றுமை என்றும் பலமாம்..ஓதும் சொல்லே நலமாம்!


அவ்வை சொன்ன மொழியாம்..அஃதே எங்கள் வழியாம்!


ஸீ யா..மீயா! சொல்லி உங்களிடமிருந்து வடை பெறுவது..சொரி,விடை பெறுவது
'என்றும் உங்கள் சேவையில் இன்பம் காணும், அன்பர் ஜீனோ'