Aug 6, 2010

பதிவுலகில் ஜீனோ..

1.வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஜீனோ தி க்ர்ர்ர்ர்ர்ர்ரேட்

2.அந்தப்பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக்காரணமென்ன?
ங்கொப்புரான சத்தியமா அதாங்கோ ஜீனோ பேரு.(நம்பிருங்கோ,இல்லைன்னா கடிதான்! வவ்வ்வ்வ்வ்வ்வ்..வ்வ்வ்) 3.நீங்கள் தமிழ்ப்பதிவுலகில் காலடி எடுத்து வைத்ததைப்பற்றி..
ஜீனோ சொம்மா இண்டர்னெட்ல சுத்திக்கினு இருக்க சொல்லோ, ஒரு தபா அறுசுவை.காம் பாத்துது..ரெம்ப நாளுக்கு சைலன்ட் ரீடரா இருந்துக்கினு இருந்தது. ஆனா கூடவே பொறந்த குசும்பு அமைதியா இருக்க உடாம அரட்டைக்குள்ள பூந்து கலாய்க்கவச்சுது. ஜீனோ கலாய்ச்சத ஒரு அக்கா,பாவம் சீரியஸா எடுத்துக்கினு ரெம்போ 10ஷன் ஆயிட்டாங்கோ..ஜீனோவும் இன்னாடா இது,ஆரம்பமே சரில்லன்னு ஜகா வாங்க ப்ளான் பண்ணுச்சி. அப்பம்தான் நியூ ஆன்ரீ அங்கே ஒரு சமாதானப்புறாவா பறந்துவந்தாங்கோ.ஜீனோ இன்னியும் வலையுலகில் இருக்குன்னா அதுக்கு மெயின் காரணம் ஆன்ரீதான். அப்பறம் சந்தன அக்கா(ஹிஹி,சொறி,பழய நெனப்பு) சந்தனா,வாணியக்கா,பிரபாக்கா அல்லாரும் ஜீனோகூட டமாஸா சிரிச்சி பேசுவாங்கோ.(ஹூஸைனம்மாக்கு கூடோ ஜீனோ 'வவ்' சொல்ல சொல்லி குடுதிருக்கு. இலாக்கா,பேபி சிஸ்டேர்,ஹைஷ் அண்ணே எல்லாரும் ஜீனோகூட டமாஸா பேச ஆரம்பிச்சாங்கோ.இப்பூடியே போயிக்கினு இருந்தது.

சடனா நெறியா பேரு அங்கருந்து abscond ஆகிட்டாங்கோ.அப்பால பாத்தா..ஆளாளுக்கு ஒரு ப்ளொக் ஆரம்பிச்சிருந்தாங்கோ.அங்கனயல்லாம் கொமெண்ட்டு போடோ ஒரு அடையாளம் வேணும்னு ஜீனோவும் ஒரு 'ஜீனோஸ் கொர்னர்' தொறந்துச்சி.

ஜீனோ இஸ் வெறி க்ளியர் இன் இட்ஸ் விஷன். ஒன்லி கலாய்ப்பு,நோ சீரியஸ் டாக்ஸ்..நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ்.திஸ் இஸ் ஜீனோஸ் மோட்டோ. அல்லாரையும் அப்பப்போ கடிக்கும்,ஆனா வலிக்காதமாதிரி.ஹிஹி!

4.உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச்செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
திஸ் கொஸ்டின் இஸ் நாட் ப்ராம்ப்ட் பார் ஜீனோஸ் கொர்னர் யா..ஜீனோ இஸ் சிம்பிள்&ஹம்பிள். கிக்,கி,கிக்!

5.வலைப்பதிவு மூலம் உங்கள் சொந்தவிஷயத்தைப் பகிர்ந்துகொண்டதுண்டா?ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன?இல்லை என்றால் ஏன்?
இது ஏமாத்துவேல..ஒரு கொஸ்டின்னு சொல்லிப்போட்டு,ஒரே கொஸ்டின்ல மூணு கொஸ்டினா? ஆ..அய்! ஜீனோ மூணு பதில் சொல்லூம்னு எக்ஸ்பெக்ட் பண்ணா ஏமாந்து போவீங்கோ. த்ரீ இன் ஒன் ஆன்ஸர்: அல்லாரையும் சிரிக்கவைக்க தன்னையும்,தன் வாழ்வையும்(!) காமெடியாக்கி, படிப்பவரை சிரிக்க வைப்பதே ஜீனோஸ் ஸ்டைல்.

6.நீங்கள் பொழுதுபோகிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
சம்பாதிக்க வாயிருக்கு..கடசி காலத்துல கஞ்சி ஊத்த புஜ்ஜி இருக்கு.ப்ளொக் இஸ் ஜஸ்ட் பார் புட்டிங் கொமெண்ட் இன் படீஸ் ப்ளொக்ஸ் &சம்டைம்ஸ் ரைடிங் ஃபன்னி போஸ்ட்ஸ் டு மேக் யு கய்ஸ் லாஃப்!

7.நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்?அதில் எத்தனை தமிழ்ப்பதிவுகள் உள்ளன?
பார்ரா..அல்லாமே மல்ட்டிபிள் கொஸ்டீன்..ஆரது இந்த கொஸ்டீன் பேப்பர் செட் பண்ணது? கர்ர்ர்ர்ர்!!
ஜீனோட்ட சுமாரா ஒரு 20-30 ப்ளொக் இர்க்கு அப்பூடின்னு சொன்னா,நம்பிருவீங்களா? அட்லீஸ்ட் 2-3? மாட்டீங்கள்ல? ஹிஹி!

/அதில் எத்தனை தமிழ்ப்பதிவுகள் உள்ளன?/ மாட்டிகிச்சே,ஜீனோ மாட்டிகிச்சே..இந்த ப்ளொக்லயே பாதி போஸ்டிங் இங்கிலீஷ்ல வந்த கொசு மெய்ல்-அ அப்பூடியே போட்டதுதான்..ஸோ,சுத்தத் தமிழ் பதிவுலாம் இல்ல பா.

8.மற்றபதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டதுண்டா?ஆம் என்றால் யார் அந்தப்பதிவர்? ஏன்?
ஜீனோஸ் மோட்டோ பத்தி மேலேயே சொல்லியாச்சி..ஸோ,நோ கோபம்,நோ பொறாமை.
பேபி சிஸ்டேர் மாதிரி காமெடி,ஆன்ரீ மாதிரி க்ரியேட்டிவிட்டி,எல்போர்டு மாதிரி டைமிங் காமெடி,ஹைஷ் அண்ணே மாதிரி அறிவு,இலாக்கா மாதிரி தத்துவம் இதெல்லாம் ஜீனோக்கும் இருந்தா நல்லாருக்கும்,,பட் இத்தனையும் ஜீனோவின் சின்ன மண்டைக்குள்ள இருக்கற சிப்-ல ஃபீட் பண்ணா..அம்புட்டுதான்,ஜீனோ அவுட்டு! ஸோ,ஜீனோ ஜீனோவாவே இருக்கும்.

9.உங்கள் பதிவைப்பற்றி முதன்முதலில் உங்களைத் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப்பற்றி..அவரது பாராட்டைப்பற்றி..
முதன்முதலாக கொமெண்ட் போட்டவர் சாட்சாத் நம்ம எல்போர்டு. அங்க மயில்முட்டை-ய பத்தி ஆன்ரீ,எல்போர்டு,ஜீனோ மூணு பேரும் சீரியஸா டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சம். மற்றும் அங்கு வந்த நண்பர்கள் எல்லாம் ஆல்ரெடி நம்ம லொள்ளு பத்தி தெரிஞ்சவங்கதேன். ஸோ ஒருத்தர சொல்லி,ஒருத்தர உட்டா நல்லார்க்காது.ஹிஹி

10.கடைசியாக..விருப்பம் இருந்தால்..உங்களைப்பற்றிய பதிவுலகத்துக்கு தெரியவேண்டிய அனைத்தும் பற்றி கூறுங்கள்.
அனைத்தும்????? இருங்கோ,ஒன் நிமிட்................
ஹிஹிஹிஹிஹீ! அல்லாரும் வெயிட்டீஸ்! ஜீனோ தெறிச்சி ஓடிடுச்சீ

தேங்க்ஸ் பார் தி ஆப்பர்சூனிட்டி கிவன் பேபி சிஸ்டேர்!! அடுத்து படியாக ஊஊ!தொடருங்கோ என்று ஜீனோ செபா க்ராண்ட்மாவை கூப்பிடுது!வாங்கோ க்ராண்ட்மா!

நாங்கள்லாம் ஆரு?சிங்கம்ல?சிங்கம்ல?சிங்கம்ல?:):)

ஆத்தாடீ..நம்ம ப்ரம்மா சுஜாதா..என் இனிய இயந்திரா இதல்லாம் டச் பண்ணாம மேட்டர முடிச்சாச்சு. ஹே கய்ஸ்,ஜீனோவப் பத்தி இன்னும் டீடெய்லா தெரின்துக்க ஆவலா? மயில் அனுப்புங்கோ geno.foo2k9@gmail.com "என் இனிய இயந்திரா" மயிலில் அனுப்பப்படும்..டும்..டும்..டும்!

17 comments:

  1. நன்றி ஜீனோ.. :))

    //ப்ரம்மா சுஜாதா..என் இனிய இயந்திரா//

    கேட்டுக் கேட்டு காதெல்லாம் புண்ணாகிப் போன இந்த பழம் பெரும் பெருமைய சொல்லாம விட்டுட்டீங்களேன்னு நினைச்சேன். அதுவும் கடேசில வந்தாச்சு :))

    ஒம்பதாவது கேள்வில //அவரைப்பற்றி..// இந்தப் பகுதி விட்டுப்போச்சு ஜீனோ.. ஹி ஹி.. சும்மா தான்.. சுட்டிக்காட்டிட்டுப் போகலாம்ன்னு நெனச்சேன்..

    முத ரெண்டு கேள்விகளுக்கும் வழக்கம் போலவே கொழ கொழா பதில்கள்.. :))

    ReplyDelete
  2. ஜீனோ இன்னும் கொஞ்சம் கடிச்சிருக்கலாம். வழக்கமான ஜீனோஸ் லொள்ளு மிஸ்ஸிங் :(.
    இட்ஸ் ஓக்கை. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

    ReplyDelete
  3. அந்த கடைசி படம் சூப்பர் ...சிங்கம் ...ஐ..சிங்கம்..அ....சிங்கம்..ஹி,,ஹி,,

    ReplyDelete
  4. ஆ..... ஜீனோவோ பச்சமரமோ.....?? ஆர் சொன்னது கர்ர்ர்ர்ர்ர்:), தம்பி கற்பூரம் மாதிரி:). எவ்வ்ளோ அழகா, நேர்மையா, உண்மைகளை..... அக்கா மாதிரியே சொல்லியிருக்கிறார், நன்றி ஜீனோ.

    முதலாவது கடிப்படம் சூப்பர்:).

    “அங்க” என்னவோ எல்லாம் நடந்திருக்கே ஜீனோ:), அக்காவுக்கு உதெல்லாம் தெரியாது... நல்லவேளை நியூ ஆன்ரி காப்பாற்றிப்போட்டா. இல்லையெண்டால், பேபிசிஸ்டருக்கு துணையாக ஒரு உடன்பிறப்பு கிடைச்சிருக்காது.

    ஜீனோ தப்பி ஓடுவது, குளிக்க மாட்டேன் என்றுதானே:).

    கடைசிப்படம்.... அண்ணனும் தம்பியுமோ?:)))), சிங்கத்தைப் பார்த்து பயந்து ஒளியக்கூடாது தம்பி...... நீங்க சிங்கம்ல...

    என் இனிய இயந்திரா அனுப்புங்கோவன்:)).

    ReplyDelete
  5. ஜீனோ ஸ்டைலில் பதில்கள் அருமை.

    ReplyDelete
  6. ஜீனோ! படமெல்லாம் சூப்பர்... கடைசியா ஒரு கேள்வி.. அடங்கொப்பரானே அது நீ தானா?

    ReplyDelete
  7. ஆஆஆ நேரமே சரியில்ல இன்னிக்கு.. அங்க போடறத இங்க போட்டுட்டேனே.. ஜெய்லானி கண்ணுல படறதுக்குள்ள அழிச்சிடறேன் :)))))

    ReplyDelete
  8. டச் பண்ணிட்டுது பப்பி. ;( (இது ஆ.க)
    அ..தி..ராஆஆ...
    வேணாம். நானே எடுக்கிறன். ;)

    ReplyDelete
  9. //ஆஆஆ நேரமே சரியில்ல இன்னிக்கு.. அங்க போடறத இங்க போட்டுட்டேனே.. ஜெய்லானி கண்ணுல படறதுக்குள்ள அழிச்சிடறேன் :))))) //

    ச்சே.ஜஸ்ட் மிஸ்டு...

    ReplyDelete
  10. படிங்க படிங்க உங்களுக்கு பிடிச்சத படிங்க .. எழுதுங்க எழுதுங்க ஆக்கபூர்வமா எழுதுங்க
    அப்படியே பரிசுகளையும் வெல்லுங்க !! ஜீஜிக்ஸ் .( www.jeejix.com )

    ReplyDelete
  11. //எழுதுங்க ஆக்கபூர்வமா எழுதுங்க
    அப்படியே பரிசுகளையும் வெல்லுங்க !! ஜீஜிக்ஸ்

    இமா=இம்ஸ்
    ச்நதானம் சே... சந்தனா=சந்தூஸ்
    அதிரா=அதீஸ்
    இலா=இல்ஸ்
    ஜீனோ=ஜீஜீக்ஸ் எப்போ ஆச்சு???

    ReplyDelete
  12. ஹா.... ஹா.. ஹா... தம்பிக்கு எப்போ புரொமோஷன் ஆச்சு?:), இந்தச் சின்ன வயதிலயே எத்தனை பட்டங்கள்.... ஜீனோ...ஜீஜிக்ஸ்... சூப்பர் ஹைஷ் அண்ணன்... உங்கள் பெயரில் ஏற்கனவே ஷ்..ஸ்ஸ்ஸ் இருப்பதால்,... தப்பிட்டீங்க:))).

    ...............................

    ஆ.... இமா...,
    ஆ.கண்ணீருக்கெல்லாம் டிஷ்யூ கேய்க்கப்பூடாது,அதை தானாகவே காயவிடோணும்.... வேணுமெண்டால் ஃபானைப் போட்டுவிடுறேன்:))).

    ReplyDelete
  13. ஜெய்லானி said...
    //ஆஆஆ நேரமே சரியில்ல இன்னிக்கு.. அங்க போடறத இங்க போட்டுட்டேனே.. ஜெய்லானி கண்ணுல படறதுக்குள்ள அழிச்சிடறேன் :))))) //

    ச்சே.ஜஸ்ட் மிஸ்டு...
    //// எப்போ எதை மிஸ்ஸாகாமல் இருந்திருக்கிறீங்க?:)) எப்பவும் மிஸ்ட்டுதானே:))).... ஆ.... இண்டைக்கு எனக்கென்னமோ ஆகிப்போச்சே... சுதந்திர தினத்தில ஆரும் முறைக்கப்பூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    .....................................

    ஜீஜிக்ஸ்... ஜீஜிக்ஸ்ஸ்... சே..சே.. வாயில மாறி மாறி எல்லாம் வருது... எல்லாம் எங்கட பைலட் அண்ணனாலதான்:)),

    தம்பி... தம்பீஈஈஈ ஜீனோ...

    உங்களுக்கும், மற்றும் அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  14. ஜீனோ கேட்டபடி தொடர்ந்து இருக்கிறேன்.
    http://seba-jeyam.blogspot.com/2010/08/blog-post_18.html
    அழைத்ததற்கு நன்றி.

    ReplyDelete
  15. ஜீனோ...அமர்க்களம்..

    ReplyDelete