Aug 6, 2010

பதிவுலகில் ஜீனோ..

1.வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
ஜீனோ தி க்ர்ர்ர்ர்ர்ர்ரேட்

2.அந்தப்பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக்காரணமென்ன?
ங்கொப்புரான சத்தியமா அதாங்கோ ஜீனோ பேரு.(நம்பிருங்கோ,இல்லைன்னா கடிதான்! வவ்வ்வ்வ்வ்வ்வ்..வ்வ்வ்) 3.நீங்கள் தமிழ்ப்பதிவுலகில் காலடி எடுத்து வைத்ததைப்பற்றி..
ஜீனோ சொம்மா இண்டர்னெட்ல சுத்திக்கினு இருக்க சொல்லோ, ஒரு தபா அறுசுவை.காம் பாத்துது..ரெம்ப நாளுக்கு சைலன்ட் ரீடரா இருந்துக்கினு இருந்தது. ஆனா கூடவே பொறந்த குசும்பு அமைதியா இருக்க உடாம அரட்டைக்குள்ள பூந்து கலாய்க்கவச்சுது. ஜீனோ கலாய்ச்சத ஒரு அக்கா,பாவம் சீரியஸா எடுத்துக்கினு ரெம்போ 10ஷன் ஆயிட்டாங்கோ..ஜீனோவும் இன்னாடா இது,ஆரம்பமே சரில்லன்னு ஜகா வாங்க ப்ளான் பண்ணுச்சி. அப்பம்தான் நியூ ஆன்ரீ அங்கே ஒரு சமாதானப்புறாவா பறந்துவந்தாங்கோ.ஜீனோ இன்னியும் வலையுலகில் இருக்குன்னா அதுக்கு மெயின் காரணம் ஆன்ரீதான். அப்பறம் சந்தன அக்கா(ஹிஹி,சொறி,பழய நெனப்பு) சந்தனா,வாணியக்கா,பிரபாக்கா அல்லாரும் ஜீனோகூட டமாஸா சிரிச்சி பேசுவாங்கோ.(ஹூஸைனம்மாக்கு கூடோ ஜீனோ 'வவ்' சொல்ல சொல்லி குடுதிருக்கு. இலாக்கா,பேபி சிஸ்டேர்,ஹைஷ் அண்ணே எல்லாரும் ஜீனோகூட டமாஸா பேச ஆரம்பிச்சாங்கோ.இப்பூடியே போயிக்கினு இருந்தது.

சடனா நெறியா பேரு அங்கருந்து abscond ஆகிட்டாங்கோ.அப்பால பாத்தா..ஆளாளுக்கு ஒரு ப்ளொக் ஆரம்பிச்சிருந்தாங்கோ.அங்கனயல்லாம் கொமெண்ட்டு போடோ ஒரு அடையாளம் வேணும்னு ஜீனோவும் ஒரு 'ஜீனோஸ் கொர்னர்' தொறந்துச்சி.

ஜீனோ இஸ் வெறி க்ளியர் இன் இட்ஸ் விஷன். ஒன்லி கலாய்ப்பு,நோ சீரியஸ் டாக்ஸ்..நோ ஹார்ட் ஃபீலிங்க்ஸ்.திஸ் இஸ் ஜீனோஸ் மோட்டோ. அல்லாரையும் அப்பப்போ கடிக்கும்,ஆனா வலிக்காதமாதிரி.ஹிஹி!

4.உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச்செய்ய என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
திஸ் கொஸ்டின் இஸ் நாட் ப்ராம்ப்ட் பார் ஜீனோஸ் கொர்னர் யா..ஜீனோ இஸ் சிம்பிள்&ஹம்பிள். கிக்,கி,கிக்!

5.வலைப்பதிவு மூலம் உங்கள் சொந்தவிஷயத்தைப் பகிர்ந்துகொண்டதுண்டா?ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன?இல்லை என்றால் ஏன்?
இது ஏமாத்துவேல..ஒரு கொஸ்டின்னு சொல்லிப்போட்டு,ஒரே கொஸ்டின்ல மூணு கொஸ்டினா? ஆ..அய்! ஜீனோ மூணு பதில் சொல்லூம்னு எக்ஸ்பெக்ட் பண்ணா ஏமாந்து போவீங்கோ. த்ரீ இன் ஒன் ஆன்ஸர்: அல்லாரையும் சிரிக்கவைக்க தன்னையும்,தன் வாழ்வையும்(!) காமெடியாக்கி, படிப்பவரை சிரிக்க வைப்பதே ஜீனோஸ் ஸ்டைல்.

6.நீங்கள் பொழுதுபோகிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
சம்பாதிக்க வாயிருக்கு..கடசி காலத்துல கஞ்சி ஊத்த புஜ்ஜி இருக்கு.ப்ளொக் இஸ் ஜஸ்ட் பார் புட்டிங் கொமெண்ட் இன் படீஸ் ப்ளொக்ஸ் &சம்டைம்ஸ் ரைடிங் ஃபன்னி போஸ்ட்ஸ் டு மேக் யு கய்ஸ் லாஃப்!

7.நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்?அதில் எத்தனை தமிழ்ப்பதிவுகள் உள்ளன?
பார்ரா..அல்லாமே மல்ட்டிபிள் கொஸ்டீன்..ஆரது இந்த கொஸ்டீன் பேப்பர் செட் பண்ணது? கர்ர்ர்ர்ர்!!
ஜீனோட்ட சுமாரா ஒரு 20-30 ப்ளொக் இர்க்கு அப்பூடின்னு சொன்னா,நம்பிருவீங்களா? அட்லீஸ்ட் 2-3? மாட்டீங்கள்ல? ஹிஹி!

/அதில் எத்தனை தமிழ்ப்பதிவுகள் உள்ளன?/ மாட்டிகிச்சே,ஜீனோ மாட்டிகிச்சே..இந்த ப்ளொக்லயே பாதி போஸ்டிங் இங்கிலீஷ்ல வந்த கொசு மெய்ல்-அ அப்பூடியே போட்டதுதான்..ஸோ,சுத்தத் தமிழ் பதிவுலாம் இல்ல பா.

8.மற்றபதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டதுண்டா?ஆம் என்றால் யார் அந்தப்பதிவர்? ஏன்?
ஜீனோஸ் மோட்டோ பத்தி மேலேயே சொல்லியாச்சி..ஸோ,நோ கோபம்,நோ பொறாமை.
பேபி சிஸ்டேர் மாதிரி காமெடி,ஆன்ரீ மாதிரி க்ரியேட்டிவிட்டி,எல்போர்டு மாதிரி டைமிங் காமெடி,ஹைஷ் அண்ணே மாதிரி அறிவு,இலாக்கா மாதிரி தத்துவம் இதெல்லாம் ஜீனோக்கும் இருந்தா நல்லாருக்கும்,,பட் இத்தனையும் ஜீனோவின் சின்ன மண்டைக்குள்ள இருக்கற சிப்-ல ஃபீட் பண்ணா..அம்புட்டுதான்,ஜீனோ அவுட்டு! ஸோ,ஜீனோ ஜீனோவாவே இருக்கும்.

9.உங்கள் பதிவைப்பற்றி முதன்முதலில் உங்களைத் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப்பற்றி..அவரது பாராட்டைப்பற்றி..
முதன்முதலாக கொமெண்ட் போட்டவர் சாட்சாத் நம்ம எல்போர்டு. அங்க மயில்முட்டை-ய பத்தி ஆன்ரீ,எல்போர்டு,ஜீனோ மூணு பேரும் சீரியஸா டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சம். மற்றும் அங்கு வந்த நண்பர்கள் எல்லாம் ஆல்ரெடி நம்ம லொள்ளு பத்தி தெரிஞ்சவங்கதேன். ஸோ ஒருத்தர சொல்லி,ஒருத்தர உட்டா நல்லார்க்காது.ஹிஹி

10.கடைசியாக..விருப்பம் இருந்தால்..உங்களைப்பற்றிய பதிவுலகத்துக்கு தெரியவேண்டிய அனைத்தும் பற்றி கூறுங்கள்.
அனைத்தும்????? இருங்கோ,ஒன் நிமிட்................
ஹிஹிஹிஹிஹீ! அல்லாரும் வெயிட்டீஸ்! ஜீனோ தெறிச்சி ஓடிடுச்சீ

தேங்க்ஸ் பார் தி ஆப்பர்சூனிட்டி கிவன் பேபி சிஸ்டேர்!! அடுத்து படியாக ஊஊ!தொடருங்கோ என்று ஜீனோ செபா க்ராண்ட்மாவை கூப்பிடுது!வாங்கோ க்ராண்ட்மா!

நாங்கள்லாம் ஆரு?சிங்கம்ல?சிங்கம்ல?சிங்கம்ல?:):)

ஆத்தாடீ..நம்ம ப்ரம்மா சுஜாதா..என் இனிய இயந்திரா இதல்லாம் டச் பண்ணாம மேட்டர முடிச்சாச்சு. ஹே கய்ஸ்,ஜீனோவப் பத்தி இன்னும் டீடெய்லா தெரின்துக்க ஆவலா? மயில் அனுப்புங்கோ geno.foo2k9@gmail.com "என் இனிய இயந்திரா" மயிலில் அனுப்பப்படும்..டும்..டும்..டும்!

மிரட்டல்...

பூஸ்:எப்ப இந்த ஜீனோ சுயபுராணம் பாடப்போகுது?

ஜீனோ தனது பிஸியான ஷெட்யூல் பற்றிய பாயின்ட்டுகளை ஒவ்வொன்றாக சிஷ்டேருக்கு எடுத்துச்சொல்கிறார்..அதன் பின்னர் பூஸக்கா..

மறுக்கா மறுக்கா ஜீனோ தனது நிலைமையை விளக்கிசொல்லி,அ.கோ.மு.எல்லாம் குடுத்து ஐஸ் வைக்கிது..அதுக்கும் பொறகு..

பூஸ்:ஓக்கை ஜீனோ..விரைவில் வேலைகளை முடித்துக்கொண்டு தொடரோணும்..அதர்வைஸ்,புஜ்ஜீ கிட்ட இருந்த துவக்கை லவட்டிட்டு வந்திருக்கறன். புல்லட்ஸ் புல்லா இருக்குது...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நடுநடுங்கிய ஜீனோ விரைவில் தொடர்பதிவு போடுவார் என்று உத்தரவாதமளித்து,அக்காவ பத்திரமா பஸ்ல வச்சு பிரித்தானியாபுரம் அனுப்பிவச்சிருச்சி. அக்காவும் சேவ்லி ரீச் ஆயிட்டாங்கள்.

சீ யா கய்ஸ் சூன் யா!