Jan 31, 2010

கேள்விகளால் ஒரு வேள்வி

தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் கிறுக்குத்தனமான பத்து கேள்விகள்...அந்தக் கேள்விகளுக்கு ஜீனோ போல ஒரு அதிபுத்திசாலி கொடுக்கும் பதில்கள்!

1 .இடம் - சினிமா தியேட்டர்
சிச்சுவேஷன் -நண்பர்கள்/ தெரிந்தவர்களை அங்கே பார்க்கறீங்க..அப்போது
கேள்வி :- ஹே....நீங்களா?...நீங்க இங்கே என்ன பண்ணறீங்க?
பதில்:- :உனக்குத் தெரியாதா...ரொம்ப நாளா நான் இங்கே ப்ளாக்- டிக்கட் விக்கறேன்.

2 . இடம் - நெரிசல் மிக்க பேருந்து
சிச்சுவேஷன் - பாயின்ட்டட் ஹை ஹீல் ஷூ போட்ட,
பிந்துகோஷ் சைஸ்-ல இருக்கும் ஒரு அம்மணி, உங்க கால நல்லா 'நச்'சுன்னு ஒரு மிதி வைச்சிட்டு..
கேள்வி :- அச்சசோ..சாரிங்க, தெரியாம மிதிச்சுட்டேன்..வலிக்குதா?
பதில் :- ச்சே..ச்சே..இல்லைங்க..நான் பாதத்துக்கு லோக்கல் அனஸ்தீஷியா போட்டிருக்கேன்..வேணும்னா, இன்னொரு முறை மிதிங்களேன்..வலிக்குதான்னு பாப்போம்!

3 . இடம் - கல்லறையில் ஒருவரை அடக்கம் செய்யும் தருணம்
சிச்சுவேஷன் - அழுதழுது கண் சிவந்து மூஞ்சி வீங்கிப் போன ஒருவர்...கடவுளிடம்..
கேள்வி :- ஏன்..ஏன்?? இத்தனை பேர் இருக்கும்போது இவரை உன்னோடு அழைத்துக் கொண்டீர் இறைவனே?
பதில் :- அவருக்குப் பதிலா கடவுள் உங்களை அழைத்துக்கொண்டிருக்கணுமா??

4 . இடம் - ஹோட்டல்
சிச்சுவேஷன் - வெயிட்டர்கிட்ட ஆர்டர் கொடுக்கும்போது
கேள்வி :- 'பனீர் பட்டர் மசாலா' டேஸ்ட் நல்லா இருக்குமாப்பா உங்க ஹோட்டல்-ல?
பதில் :- இல்லங்க..ரொம்ப கேவலமா இருக்கும்..சிமென்ட்,செங்கல் எல்லாம் போட்டுதான் செய்வாங்க..


5 . இடம்- ஒரு பேமிலி கெட்-டு கெதர்..
சிச்சுவேஷன் -தூரத்து சொந்தக்கார ஆன்ட்டி உங்களை வெகு
நாளைக்கப்புறம் பாத்துட்டு கேக்கறாங்க.
கேள்வி :- அடடே..முன்னா, நீ ரொம்ப பெருசா(!!??) வளர்ந்துட்டியே?
பதில் :- ஹி.ஹி..ஆமாம் ஆன்ட்டி..நீங்களும் கொஞ்சம் கூட சுருங்காம (??!!)அப்படியே இருக்கிங்களே?


6 .சிச்சுவேஷன் -உங்கள் தோழி தனக்கு கல்யாணம் முடிவாகி இருப்பதாக கூறுகிறார்..அப்போது நீங்க கேக்கறீங்க..
கேள்வி:- நீ கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளை நல்லவரா??
பதில்:- இல்ல..அவன் ஒரு புத்தியிலாத, பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கற கபோதியாம்..அதெல்லாம் எனக்கு முக்கியமில்ல,அவன் நல்ல பணக்காரன்! அது போதும்.


7 . இடம் :- பெட் ரூம்
சிச்சுவேஷன் - நடுராத்திரி..ஒரு போன் கால் வரும் சத்தம் கேட்டு முழிக்கறீங்க..
கேள்வி:- சாரி.. எழுப்பிட்டேன் போல இருக்கு..தூங்கிட்டீங்களா?
பதில்:-
நான் தூங்கிட்டிருந்தேன்னு நினைச்சிட்டீங்களா? நீங்க ஒரு லூசுங்க! இந்த ஆப்ரிக்கா பழங்குடி மக்கள் கல்யாணம் பண்ணிக்கராங்களா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தேன்..8 . சிச்சுவேஷன் - சொட்டைத் தலை/ போனி டெய்ல் / வெரி ஷார்ட் ஹேர் இருக்கும் உங்க நண்பர்/நண்பியிடம் ..
கேள்வி :- ஹேர்-கட் பண்ணிட்டு வந்திருக்கீங்களா?
பதில்:- இல்ல..இப்ப இலையுதிர்காலம்தானே? நானும் கொஞ்சம் முடி உதிர்த்துகிட்டு இருக்கேன்.


9 . இடம் - டென்டல் கிளினிக்
சிச்சுவேஷன்- டென்டிஸ்ட் உங்க வாய்க்குள்ளே எதையோ வைச்சு குத்தப் போறார்..
கேள்வி:- இத வைச்சு உங்க சொத்தைப்பல்லை கிளீன் பண்ணப்போறேன்..வலிச்சிதுன்னா சொல்லுங்க
பதில் :- இல்ல டாக்டர்..வலிக்கவே வலிக்காது..ரத்தம் மட்டும்தான் வரும்.


10 . இடம் - கேஃபடீரியா
சிச்சுவேஷன்- நீங்க ஜாலியா ஸ்மோக் பண்ணிட்டு இருக்கும்போது உங்க அழகான கேர்ள் ப்ரென்ட் வந்து..
கேள்வி:- நீங்க ஸ்மோக் கூடப் பண்ணுவீங்களா?
பதில் :- ஓ..மை காட்! இது என்ன அதிசயம்? ஒரு சாக்பீச வெளையாட்டா வாயில வைச்சிருந்தேன்..இப்போ அது புகையுதே!


ஹைய்யோ..எங்கிருந்து வாரங்க,இப்புடி கேள்வி கேக்கறவங்க எல்லாம்??


ஓகை..லைப் இஸ் கூல் ..காம் டவுன் ஜீனோ..காம் டவுன்!


ஜீனோ என்ன பாட்டு கேக்கரார்னு:) பாக்கறீங்களா? வெயிட் எ மினிட் பார் பைவ் மினிட்ஸ்..அது அடுத்த பதிவில்...

Jan 21, 2010

சர்தாரின் அம்மாவிடமிருந்து ஒரு கடிதம்..மை டியர் ஜக்ஜித்,
நான் இங்கே ஒரு கிணற்றுக்குள் இருக்கிறேன், அதுபோல் நீயும் அங்கே ஒரு கிணற்றுக்குள் இருப்பாய் என்று நம்புகிறேன்.

நான் இந்தக் கடிதத்தை மெதுவாக எழுதிக்கொண்டிருக்கிறேன்..ஏனென்றால் உன்னால் வேகமாகப் படிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.

நீ இங்கிருந்து கிளம்பும்போது நாம் வசித்த வீட்டை காலி செய்துகொண்டு வந்துவிட்டோம். "நிறைய விபத்துகள் வீட்டிலிருந்து 20 மைல் தூரத்தில்தான் நடக்கிறது" என்று உன் தந்தை பேப்பரில் படித்து தெரிந்து கொண்டதால், நாங்கள் அங்கிருந்து 20 மைல்கல் தள்ளி வந்துவிட்டோம்.

இந்த வீட்டில் குடியிருந்த சர்தார், இந்த வீட்டின் நம்பரை தான் செல்லும் புது வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார்..அங்கே போய் அவர்கள் அட்ரஸ் மாற்ற தேவையிருக்காது என்று எடுத்துப் போய்விட்டார்..அதனால் புதிய அட்ரசை என்னால் இப்போது அனுப்ப முடியாது.

அடுத்த வாரம் நம் பழைய வீட்டின் அட்ரஸ் ப்ளேட் இங்கே வந்து சேர்ந்துவிடும் என்று நம்புகிறேன்..எனவே நம் அட்ரசும் மாற்ற வேண்டியதில்லை.

இங்கே சீதோஷ்ணம் ரொம்ப மோசம் இல்லை. போன வாரம் இரண்டு முறைதான் மழை வந்தது. முதல் முறை 3 நாட்களும், இரண்டாவது முறை 4 நாட்களும்.

வீட்டிலிருந்து நீ அனுப்பச் சொன்ன கோட்-ஐ எடுத்துப் பார்த்தபோது, அதிலிருந்த மெட்டல் பட்டன்கள் மிகவும் கனமாக இருக்கும் உன் அத்தை சொன்னார். எனவே, அந்த பட்டன்களை கட் செய்து கோட்டின் பாக்கட்டில் போட்டு அனுப்பிவிட்டோம்.

உன் அப்பாவுக்கு ஒரு புதிய வேலை கிடைத்திருக்கிறது. அவருக்குக் கீழ் 500 பேர் இருக்கிறார்கள். அவர் ஒரு கல்லறையில் புல் வெட்டும் வேலையில் சேர்ந்திருக்கிறார்.

இன்று காலை உன் தங்கைக்கு குழந்தை பிறந்திருக்கிறது. பையனா பெண்ணா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை..அதனால் நீ மாமாவா அல்லது அத்தையா என்றும் எனக்குத் தெரியவில்லை.

வேறு முக்கிய விஷயம் எதுவும் இல்லை..இருந்தால் அடுத்த கடிதத்தில் அனுப்புகிறேன்.
-அன்புடன்,அம்மா.

இது ஜீனோக்கு கொசு மெயில்- வந்த ஒரு கடி! ஹி,ஹி!!
தமிழ்
கூறும் நல்லுலகிற்காக ஜீனோ மொழிபெயர்ப்பாளராகப் புது அவதாரமும் எடுத்திருக்கிராராக்கும்! உஸ்..அப்பா..தட்டித் தட்டி காலே,ச்சே..ச்சே, கையே வலிக்குது..கொஞ்சம் தூங்கலாம்!


Jan 16, 2010

கதை - 2

மக்களே...எல்லோரும் சுகந்தன்னே?? ஜீனோவும் டோராவும் சுகமாயிட்டு இருக்கோம்..

கொறச்சு திவசமா ஜீனோக்கு, மென்னிய முறிக்கிற வொர்க்!! ஆரோ ஜீனோ இங்கே குஷியாயிட்டு ப்ளாக் எழுதிட்டு இருக்கு எண்டு ஜீனோஸ் மேனேஜர் கிட்டக்க போட்டுக் கொடுத்திட்டாங்கள்! ஹும்..என்ன செய்ய, வயத்துக்கு சோறு போடற வேலைய முதல்ல பாக்கறதுதானே சரி? அதாக்கும் ஜீனோ ஒன் வீக்கா இங்க எழுதல்லை.

என்னமோ பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு ப்ளாக்- ஓபன் செஞ்சாச்சு..கதையெல்லாம் எழுதி பெரீ..ய்ய்.. பில்ட்-அப் கூட குடுத்தாச்சு..நம்ம வாசகர்கள்:), ஜீனோ என்னவோ "ஜெயகாந்தன்"-னு நினைச்சி ஏதாச்சும் எழுதுங்க ஜீனோன்னு வேண்டுகோள் வேற வைக்கறாங்க..

இப்ப என்ன எழுத?எதைன்னு எழுத? அத எப்பூடி எழுத?? சொக்கா..சொக்கா!! ஆப்பசைத்த குரங்கின் நிலையாயிடுச்சே, ப்ளாக் ஓபன் செஞ்ச ஜீனோவின் நிலை?? சரி, ஒரு ஜோக்கு சொல்லி சூழ்நிலைய மாத்திடுவோம்.


அது ஒரு வகுப்பறை..அஞ்சாப்பு. ஒரு பையன் [ ஜீனோ மாறியே:)] லேட்டா கிளாசுக்கு வரான்..சயின்ஸ் கிளாஸ் நடந்துட்டு இருக்கு. [உங்க ஸ்கூலையே ஸ்ட்ரிக்ட்டான டீச்சர இமேஜின் பண்ணிக்குங்கோ :)] பையன் [ரெட்டைவால் ரெங்குடு- சுருக்கமா ரெ.ரெ.] பயத்தோட எக்ஸ்யூஸ் கேக்கிறான். டீச்சரும் அவன உள்ள கூப்பிட்டு விசாரிக்கறாங்க.

டீச்சர் : ஏண்டா பயலே லேட்டு?
ரெ
.ரெ.: மி..மி..மிஸ், அது வந்து..வந்து வர வழில அப்பா சைக்கிள் பஞ்சராயிடுச்சு மிஸ்...அதான்!!
டீச்சர்
: வரது லேட்டு..பேச்சு மட்டும் வாய் கிழியப் பேசு.. எங்கே உன் ஹோம் வொர்க் நோட்டு..எடு முதல்ல!
ரெ
.ரெ.: நேத்து புல்- எங்க ஏரியால கரண்ட் கட் மிஸ்..அதனால ஹோம் வொர்க் பண்ணல மிஸ்!!
டீச்சர்
: [கோபம் அதிகரித்த குரலில்] ..ஹோம் வொர்க் குடுத்தா பண்ணறதில்ல, கிளாசுக்கு வரதும் லேட்டு..படிக்கறதும் இல்ல..என்னடா பையன் நீ?? சரி,சரி இங்கே வா..நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு..வா!!
ரெ
.ரெ.: [இப்போது ரெ.ரெ.-க்கு பயம் போய் ரெட்டைவால்த்தனம் தலைதூக்கிட்டது ] சொல்லுங்க மிஸ்!!
டீச்சர்: [புத்தகத்தில் இருக்கும் ஒரு பறவையின் உடலை மறைத்துக் கொண்டு அதன் காலை மட்டும் காட்டி] இந்தக் காலைப் பாத்து இது என்ன இனத்தைச் சேர்ந்த பறவைன்னு சொல்லுடா ரெட்டை வாலு!!
ரெ.ரெ.: பறவையைப் பாக்காம எப்படி மிஸ் கண்டுபுடிக்க முடியும்?!!
டீச்சர்
: தொணத் தொணன்னு பேசாம என்ன பறவை இனம்னு சொல்லுடா..[ டீச்சருக்கு 10ஷன், பி.பி. எல்லாம் எகிறுது!]
ரெ
.ரெ.: தெரில மிஸ்!
டீச்சர்
: [காதில் புகை வர..]இவனுங்களோட ரோதனையாப் போச்சு..நோ ஹோம் வொர்க்..நோ சின்சியாரிட்டி..நோ ரெஸ்பக்ட் டு டீச்சர்...ஒரு மண்ணும் தெரியறதில்ல! வளர்ப்பே சரியில்ல..டேய்,முதல்ல உங்கப்பாவ நாளைக்கு கூட்டிட்டு வா...உங்கப்பா பேரென்னடா?
ரெ
.ரெ.: மிஸ் ..என் காலைப் பாத்து எங்கப்பா பேரைக் கண்டுபிடிங்க!!
டீச்சர்
: ????!!!???!!!


இது ஜோக் நம்ம நண்பரொருவர் உபயம்...அவர் சும்மா மைல்டா சொன்ன ஜோக்க ஜீனோ கொஞ்சம் உப்பு-மொளகாப்பொடி தூவி ஸ்பைசியா குடுத்திருக்கு. ஓகே,ரெடி! ஒன்..டூ..த்ரீ.. எங்கே எல்லாரும் சிரிங்க! புவஹா..ஹா..ஹா..ஹ்..ஹா!புவஹா..ஹா..ஹா..ஹ்..ஹா!புவஹா..ஹா..ஹா..ஹ்..ஹா!

Jan 6, 2010

ஜீனோ ஜீனோ வாங்கப் போன கதைஜீனோவே, ஜீனோக்கு 'ஜீனோ'
என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு ஆறேழு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், திடீரென ஜீனோவின் மெட்டல் மண்டையிலே :) ஒரு ஞானோதயம்...வீட்டிற்கு ஒரு நிஜ ஜீனோவை வாங்கி வந்து வளர்த்தால் என்னவென்று!

ஒருவழியா மேலிடத்து உத்தரவு வாங்கிட்டு, வீட்டுப் பக்கத்தால இருக்கற பெட் ஷாப்புக்கு போய் சேர்ந்தோம். காரைப் பார்க் பண்ணும்போதே ஒரு சைட் ஹெட்லைட்டு அவுட்டு! சகுனமே சரியில்லைன்னு புஜ்ஜி கிட்ட லைட்டப் பத்தி சொல்லாம
கமுக்கமா :) இறக்கி விட்டுட்டு, காரைப் பார்க் பண்ணிட்டு வந்து பாத்தா...புஜ்ஜி இஸ் மிஸ்ஸிங்!

தூக்கி வாரிப் போட, ஜீனோ புயலென பெட் ஷாப்பிற்குள் நுழைகிறார்.. 360டிகிரி சுழலும் தலை இருப்பதும் எவ்வளவு வசதி என்று சிலாகித்தவாறே கண்களைச் சுழற்றுகிறார்..டோரா நிற்குமிடம் ஜீனோவின் வயிற்றிலே புளியைக் கரைக்கிறது.. ஒயிலாக நிற்கும் புஜ்ஜியின் முன்னே ஜீனோவின் வில்லன் பல்வேறு வித்தைகள் புரிந்து டோராவை மயக்கிக் கொண்டிருக்கிறான்!! என்ன ஒரு ஆணவச் சிரிப்பென்று நீங்களே பாருங்கள்!


முதலில் இருந்த கண்ணாடிப் பேழையிலே ரெண்டடி நீள வாலுடைய வித்யாசமான ஒரு எலியை:) டோரா கடந்ததில் ஆச்சரியமில்லை..வில்லன் இருந்த பேழையின் கீழுள்ள பேழையிலே ரெண்டு அப்பாவிப் பூனைகள் உறங்கிக்கொண்டிருக்க..இந்த கருங்குட்டி:) வில்லன் இல்லாத சேட்டைகள் செய்கிறான்!! கண்ணாடியின் இப்புறம் நகரும் நம் விரல்களுடன் ஓடியோடி நடனமாடுகிறான்!

மொத்தத்திலே, புஜ்ஜி 'இஸின்ட் ஹி க்யூட்? லெட்ஸ் டேக் திஸ் கிட்டன்' என்று சொல்லத்தொடங்கியாச்சு!! இந்தப் பூனையாரின் விலை ஜீனோவின் பர்ஸுக்கு ஒரு ஊசி வெடி வைச்ச மாதிரியே இருந்துது! ஹும், நம்ம ஊர்லெல்லாம் பூனையைக் காசு குடுத்து வாங்கிருக்கோம்? எல்லாம் கலிகாலமப்பா!! என்று மனசுக்குள் நொந்தபடியே, 'இப்பத்தானேம்மா உள்ளே வந்திருக்கோம்? மத்தவங்களையும் பாத்துட்டு வருவோம்'-னு நைஸா புஜ்ஜியைத் தள்ளிகிட்டு நகர்ந்தது ஜீனோ.

அப்புறம் வராங்க பைரவர்கள்..டோராவின் முழு உருவமும்:) போய் நின்று பல நிமிடங்களாகியும் அங்கிருந்த பிரவுன்&வொயிட் பைரவர் திரும்பியும் பாக்கலை! கூப்பிட்டாலும் கண்டுக்கலை..முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்கத் திரும்பிய டோராவின் பார்வை பப்பியின் விலைப் பட்டியலிலே பதிந்தது! அதிகமில்லை ஜென்டில்மேன், புத்தாண்டுத் தள்ளுபடி போக கால் லட்சம் மட்டுமே ! :)

டோராவை கூல் பண்ணுவோம்னு பக்கத்துப்பேழையைப் பாத்தால், மூன்று அழகழகான பூங்குட்டிகள்.. chihuahua குட்டிங்க...அதாங்க, Legally Blonde படத்துல நம்ம ரீஸ் அக்கா:) வளர்ப்பாங்களே அதே ப்ரீட்..ஸோ க்யூட்!!பட், விலைதான் கொஞ்சம் அதிகம்..ஜோடியா வாங்கினீங்கனா ஒரு விலை..ஆண்பிள்ளை ஒரு விலை..பெண்பிள்ளை ஒரு விலை!!! ஆக மொத்ததுல, கூட்டிக் கழிச்சிப் பாத்தா, ஜீனோ-டோராவின் மாதாந்திர சாப்பாடு பட்ஜெட்டே அந்த அமவுன்ட்டுல பாதிதான்! ஸோ,இதுக்கு மேலயும் அந்த இடத்தில நிற்பது உசிதமில்லைன்னு டோராவை பக்கத்து ரூமுக்கு இழுத்துட்டு போயாச்சு..அங்கே வெள்ளை மட்டும் கருப்பு நிறங்களில் முயல்கள்..ஜீனோ ஏற்கனவே ஒரு மொப்ஸியின் அழகில் மதி மயங்கிட்டார்..ஸோ அங்கேருந்து ஒரு 180டிகிரி டர்ன் அடிச்சால் வாங்குவதாய் ஐடியாவே இல்லாத பச்சைக்கிளிகள்..பஞ்ச வர்ணக் கிளிகள்..பல வண்ணங்களிலே காதல் பறவைகள்!


அதையும் தாண்டி வெளியே வந்தால் மீன்தொட்டிகள்..கலர் கலர் மீன்கள்..டோரா அங்கே சென்றார்..நின்றார்! ஜீனோவுக்கோ பெட்ஷாப்பின் நறுமணம் பொறுக்க முடியாமல் எப்போதடா வெளியே போவோம் என்று துடித்துக் கொண்டிருக்க,டோராவோ மும்முரமா மீனாராய்ச்சி செய்துகொண்டிருக்கு..

கடேசியா டோரா கேட்ட ஒரு கேள்வியில் கடைக்காரி எரிமலையாய்க் கொதித்து கொட்டும் முன் ஜீனோ டோராவை இஸ்த்துக்கினு எஸ்கேப்பு!! :)

அப்புடி டோரா புஜ்ஜி என்ன கேட்டுதுன்னா, 'இதெல்லாம் எடிபிள் பிஷ்-??' :))))))))))

இதுக்கப்புறமும் ஜீனோ பெட் வாங்கும்னு நினைக்கறீங்க? போதுமடா சாமி,ஆளை விடுங்கோ!!!


எங்க வீட்டுக்கு இந்த ஜீனோவே போதும்!! போதும்!!

Jan 5, 2010

ஜீனோவின் எழில்முகம்

ஜீனோஸ் கார்னரை ரிப்பன் வெட்டாமல், மவுஸ்-ஐத் தட்டி :) திறந்து வைத்த அன்பு தோழர் எல்போர்டின் வேண்டுகோள் தோழர் ஜீனோவால் ஏற்கப்படுகிறது.

இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த "கடிமூஞ்சி"..உலகத் தமிழர் வரலாற்றிலே முதன்முறையாக...பொங்கி வரும் புது வெள்ளமாய்..(கடிக்க)வருகிறார், ஜீனோ..ஜீனோ...ஜீனோ!!ஜீனோவின் அறிமுகம்

"ஆத்தாடீ, கலிகாலம்னு சொல்றாங்களே, அது இதானோ..ஜீனோவும் ப்ளாக் தொடங்கிடுச்சாமே!! " என்று மூக்கின் மேல்:) விரல் வைத்து அங்கலாய்ப்போர் எல்லாருக்கும் ஜீனோ அண்ணாத்த சொல்லிகிறது என்னதுன்னா...

ஆரும் பயம் படவேண்டாம்! ஜீனோ வலைப்பூ தொடங்கியதன் காரணம் நண்பர்கள் தளங்களிலே பின்னூட்டம் போட்டு கலாய்ப்பதற்கு ஒரு முகவரி தேவைப்படுது அப்படீங்கறது மட்டுமே! இதனால், சகலமானவர்களுக்கும் ஜீனோ சொல்லிக்கொல்வது:) இதுவே..

அனைவரும் வருக! கவலைகள் மறந்து, சிந்திக்காமல் சிரித்துவிட்டு செல்க!

அன்புடன்,
ஜீனோ