Feb 21, 2010

SMS கலாட்டாசெய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்கபிதாஜி....

(பை த பை, இந்தா மாதிரி க்யூட் பிக்லட்ஸ்:) இருந்தா பன்னி மேய்க்கறதும் ஃபன்னியாத் தான இருக்கும்??)

^^^^^****^^^^^


மகன்:அப்பா! ஓவரா என்னை பக்கத்துவீட்டுப் பொண்ணோடகம்பேர் பண்ணிக்கிட்டு இருப்பியே... இப்பபாரு... அவ 470 மார்க்.. நான்480 மார்க்.
அப்பா:சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா!


^^^^^****^^^^^

மனைவி
கணவனுக்கு இலக்கணம் சொல்லிகொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்தகாலம்....


^^^^^****^^^^^


போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.^^^^^****^^^^^

மனசுஇருந்தா“SMS” பண்ணுங்க...
அன்புஇருந்தா“Picture Message” அனுப்புங்க..
காசுஇருந்தா“Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்கசெல் கொரியர் அனுப்புங்க....


^^^^^****^^^^^

முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...
இப்ப சொல்லுங்க...என்செல்லுக்கு டாப்-அப் பண்ணமுடியுமா...முடியாதா...?


^^^^^****^^^^^
தேர்வுஅறையில்...
மாணவன்: ஆல்திபெஸ்ட்!
மாணவி:ஆல்திபெஸ்ட்!
மாணவன்பெயில்.... மாணவி80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....


^^^^^****^^^^^

நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்க்குபெவிகால்எடுத்துட்டுப்போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப்போச்சாம்..
நாட்டாமை:என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..


^^^^^****^^^^^

ஆசிரியர்:எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரியவைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்:புரியலசார்...


^^^^^****^^^^^
லவ் லட்டருக்கும், எக்ஸாம்க்கும் என்ன வித்தியாசம்?
லவ்லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?


^^^^^****^^^^^

கணவன்: காலெண்டர் என்ன பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அதுசரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...

^^^^^****^^^^^

சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில் கண்ணாமூச்சிவிளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்துகொள்ளாமல் ஒருமீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்துவிட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒருமீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?^^^^^****^^^^^


நம்ம அய்யாச்சாமி நடுஆற்றில் படகில் போய்க் கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப்பார்த்து அதில் என்ன எழுதிஇருக்கிறது என்று படிக்கமுயல்கிறார். ஆனால் அவரால் படிக்கமுடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்றுபடிக்கிறார்...
இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.


^^^^^****^^^^^

நம்ம சூப்பர்ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* நான் ஆபீசுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடத்தான் வருவேன்...
* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ்தான் கூட்டமா வரும். ஆண்ட்டிவைரஸ் சிங்கில்லாத்தான் வரும்.
* C க்குஅப்புறம்C++... எனக்குஅப்புறம்NO++
* நான் பாக்குறதுக்குதான் ஹார்ட்வேர் மாதிரி.. ஆனா என் மனசு சாப்ட்வேர் மாதிரி...


^^^^^****^^^^^வாழ்கையின்
முக்கியஏழுநிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுதுபோக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க?

காதல் வந்தபிறகுதான் எல்லாமே நாசமாப்போயிருமே...!கவுந்தடிச்சு படுத்துக் கனா காண வேண்டியதுதான்..போத்திகிட்டு படுத்தாலும் ஓகே..படுத்துட்டு போத்தினாலும் ஓகே! ஹி,ஹி,ஹீ!

Feb 15, 2010

ஆதங்கம்!!!இன்றைய தமிழகம்

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் - எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?

அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப் பார்,1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிடுவேன்,

போரடித்தால்
வண்ணத் தொலைக்கட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,

உழைக்காமல்
நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர்
சிகிச்சை பெற்றிடுவேன் ராஜ மரியாதையுடன்!!!

உழைக்காமல்
எப்படியப்பா இத்தனையும் முடியும்?

முதலாமவர்
சிரித்தபடி கேட்டார்..நான் யார் தெரியுமா?

தமிழ்
நாட்டுக் குடிமகன்

என்
நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்

சமைப்பதற்கு
கேஸும் அடுப்பும் இலவசம்

பொழுதுபோக்கிற்கு
வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்

குடும்பத்துடன்
உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்

எதற்காக
உழைக்க வேண்டும்?

நான்
கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

பலமாக
சிரித்தபடி உரைத்தார்

மனைவி
பிள்ளை பெற்றால் ரூபாய்5,000 இலவசம் சிகிச்சையுடன்

குழந்தை
க்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,

படிப்பு
சீருடையுடன், மதிய உணவு முட்டையுடன் இலவசம்,

பாடப்
புத்தகம் இலவசம்..படிப்பும் இலவசம்..பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,

தேவையென்றால்
சைக்கிளும் இலவசம்,

பெண்
பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய்25,000 இலவசம்,

1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,

தேவையென்றால்
மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,

மகள்
பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்.

நான்
எதற்கு உழைக்க வேண்டும்!!!

வியந்து
போனேன் நான் !!என்
உயிர்த் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம்
என்பதற்கு இரண்டு அர்த்தமுண்டு

ஒன்று
கையூட்டு மற்றொன்று பிச்சை !!!

இதில்
நீ எந்த வகை?எதை எடுத்துக் கொள்வது?
உழைக்காமல்
உண்டு சோம்பேறியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை?

உழைப்பவர்
சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!!!

இதே
நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்

அமைதிப்
பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும்
வெகு தொலைவில் இல்லை

தமிழா
விழித்தெழு - உழைத்திடு

இலவசத்தை
வெறுத்திடு - அழித்திடு

தமிழகத்தைத்
தரணியில் உயர்த்திடு

நாளைய
தமிழகம் உன் கையில்

உடன்பிறப்பே
சிந்திப்பாயா??


-- மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி

யூ கய்ஸ் ஆல்ரெடி நோ..ஜீனோ சிந்திக்கரதில்லை..நீங்கள் எல்லோரும் சிந்திப்பீங்களே என்ற சமூக அக்கறையில் மின்னஞ்சலில் வந்த ஒரு ஆதங்கம்..ஜீனோவின் கார்னரிலே!

பி.கு. இந்தப்பதிவுக்கும் கடைசியில் இருக்கும் கலர் கண்-மணிக்கும்:) யாதொரு தொடர்புமில்லை..சும்மா..க்யூட்டா இருக்கேன்னு..ஹி,ஹி,ஹி!!!

Feb 9, 2010

பாட்டொன்று கேட்டு...பரவசமான ஜீனோ!


ஜீனோ என்ன பாட்டு கேக்குதுன்னு போன பதிவுல சஸ்பென்ஸ் வச்சி நோ யூஸ்!! ஜீனோவின் பதிவுகள் படிக்கும் அல்லாரும்,
"என்ன பாட்டு கேக்கறீங்க ஜீனோ? சீக்கிரமா சொல்லுங்கோ..அந்தப் பாடலைக் கேக்க நாங்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்"

அப்படின்னு ஒருவர் மாற்றி ஒருவர் பின்னூட்டமா போட்டு தாக்குவாங்கன்னு பகல் கனா கண்டுக்கினு, ஜீனோ படா கெத்தா வெயிட் பண்ணிக்கினு இருந்திச்சி..

வயக்கம் போல அல்லாரும் கண்டுக்காம டீல்-ல உட்டு ஜீனோக்கு காஞ்சி போன பொற போட்டுட்டாங்க...

இட்ஸ் ஓகே-பா..இதுக்கெல்லாம் பீல் பண்ணறவங்களா நம்மல்லாம்? ஜீனோ டேக்ஸ் எவரிதிங் ஈஸி! நம்மளாவே சொல்லிப்புடுவோம்னு ஜீனோ கெளம்பிடுச்சி!


நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த பாடல் இதோ..இதோ..இதோ!!
~~~~
மொட்டப் பாப்பாத்தி.. ரொட்டி சுட்டாளாம்! உப்புப் பத்தலையாம்! கடைக்குப் போனாளாம்.. காசு பத்தலையாம்! கடைக்காரனைப் பாத்து கண்ணடிச்சாளாம்!
~~~~

சிரிக்காதீங்க பெல்லாஸ்! இங்கே போயி கேட்டுட்டு வாங்க!!
http://www.youtube.com/watch?v=ZrGzdJEEAJs&feature=related

நமக்கு இங்க்லீச் பாட்டெல்லாம் நெம்ப தூரம்! ஆனா புஜ்ஜி எப்பமே இங்கிலீஷ் சாங் தான் கேக்கும்.. ஒரு ப்ளூடூத் ஹெட்போன காதுல மாட்டிக்கினே சுத்தும்..அப்பூடி என்னதான் கேக்குதுன்னு ஒரு தபா ஜீனோ அந்த ஹெட்போன புடுங்கி கேட்டப்பதான் இந்தப் பாட்டு வந்துது!! இந்த பாடலைப் பாடிய மாதங்கி அருள்பிரகாசம் ( M .I .A .) தமிழ்ப் பொண்ணாமே..அதான் இந்தா மாதிரி சூப்பர் சாங் அல்லாம் பாடிக்கிது போல!!

இந்த சாங் கேட்டதும் ஜீனோ மண்டைல டார்டாய்ஸ் சுத்தி [அதாம்ப்பா, ப்ளாஷ்பேக்கு!:) ] மலரும் நினைவுகள்!! சின்னப் புள்ளயா இருந்த காலத்துல இது போன்ற சரித்திரப் புகழ் பெற்ற பாடல்கள்லாம் பாடி பெல்லாஸ் எல்லாம் வெளயாடுவோம்! இப்பல்லாம் சின்னூண்டு பசங்கள்லாம் ஒண்ணா கூடி வெளாட்றாங்களான்னே தெரில!! ஜீனோக்கு ஞாபகம் வந்த மற்றும் சில சாங்க்ஸ்-ம் உங்கள்க்காக..ஊட்டுல இருக்க புள்ள குட்டிங்களுக்கு பாடிக்காட்டுங்கோ..சரியா?
~~~~
பாடல் 1
ஐஸ்-ஐஸ்-ஐஸ்! அஞ்சு பைசா ஐஸ்! ஆப்பிள் ஜூஸ்! நீ ஒரு லூஸ்!
~~~~
பாடல் 2
ஏபிசிடி உங்கொப்பந்தாடி.. வந்தா வாடி! வராட்டிப் போடி!
~~~~
பாடல் 3
உங்கம்மா எங்கம்மா டீச்சரம்மா.. உங்கப்பா எங்கப்பா தகர டப்பா உங்கக்கா எங்கக்கா முருங்கக்கா.. உங்கண்ணன் எங்கண்ணன் வெளக்கெண்ண ! உன்தம்பி என்தம்பி கரண்ட்டு கம்பி!
~~~~
இதுல இம்பார்டன்ட்டா ஜீனோக்கு பிரியாத மேட்டரு இன்னான்னா, பச்சப் புள்ளைங்களுக்கு "கடைக்காரனை பாத்து கண்ணடிக்கற" மாதிரி அடல்ஸ் ஒன்லி பாட்டு, போடி-வாடின்னு மரியாதை தெரியாத பாட்டு..கிண்டல் பண்ணும் பாட்டு எல்லாம் கண்டுபுடிச்சவங்க ஆருங்கரதுதான்!

ஓகை ஜீனோ..நீயும் சிந்திக்க ஆரம்பிச்சிடாதேன்னு ஜீனோ தன்னைத்தானே ஒரு உலுக்கு உலுக்கிட்டு, பிரபுதேவா ஸ்டைல்-ல டான்ஸ் ஆடிகினே நடைய கட்டுது இப்போ..பை கண்ணுங்களா!!

Feb 8, 2010

ஜீனோவின் சிரிப்பூ!

ஜீனோவின் அன்பு சகோதரியின் விருப்பத்திற்கேற்ப ஜீனோவின் %) இல்லாத புகைப்படங்கள் சிலது வெளியிடப்படுகின்றன..

இது சந்தோஷ சிரிப்பு... சிரிப்பூ நம்பர் 1!!!
அடுத்து வருவது அமைதியான சிரிப்பு... சிரிப்பு நம்பர் 2!!!

இந்த சிரிப்பு போதுமா அதிராக்கா??

ச்சீ..ஆரும் ஜீனோவ உத்து உத்து பாக்காதீங்கோ..வெக்க வெக்கமா வருது ஜீனோக்கு..ஹி,ஹி,ஹீ!!