
ஜீனோ என்ன பாட்டு கேக்குதுன்னு போன பதிவுல சஸ்பென்ஸ் வச்சி நோ யூஸ்!! ஜீனோவின் பதிவுகள் படிக்கும் அல்லாரும்,
"என்ன பாட்டு கேக்கறீங்க ஜீனோ? சீக்கிரமா சொல்லுங்கோ..அந்தப் பாடலைக் கேக்க நாங்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்"
அப்படின்னு ஒருவர் மாற்றி ஒருவர் பின்னூட்டமா போட்டு தாக்குவாங்கன்னு பகல் கனா கண்டுக்கினு, ஜீனோ படா கெத்தா வெயிட் பண்ணிக்கினு இருந்திச்சி..
வயக்கம் போல அல்லாரும் கண்டுக்காம டீல்-ல உட்டு ஜீனோக்கு காஞ்சி போன பொற போட்டுட்டாங்க...
இட்ஸ் ஓகே-பா..இதுக்கெல்லாம் பீல் பண்ணறவங்களா நம்மல்லாம்? ஜீனோ டேக்ஸ் எவரிதிங் ஈஸி! நம்மளாவே சொல்லிப்புடுவோம்னு ஜீனோ கெளம்பிடுச்சி!

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த பாடல் இதோ..இதோ..இதோ!!
~~~~
மொட்டப் பாப்பாத்தி.. ரொட்டி சுட்டாளாம்! உப்புப் பத்தலையாம்! கடைக்குப் போனாளாம்.. காசு பத்தலையாம்! கடைக்காரனைப் பாத்து கண்ணடிச்சாளாம்!~~~~
சிரிக்காதீங்க பெல்லாஸ்! இங்கே போயி கேட்டுட்டு வாங்க!!
http://www.youtube.com/watch?v=ZrGzdJEEAJs&feature=relatedநமக்கு இங்க்லீச் பாட்டெல்லாம் நெம்ப தூரம்! ஆனா புஜ்ஜி எப்பமே இங்கிலீஷ் சாங் தான் கேக்கும்.. ஒரு ப்ளூடூத் ஹெட்போன காதுல மாட்டிக்கினே சுத்தும்..அப்பூடி என்னதான் கேக்குதுன்னு ஒரு தபா ஜீனோ அந்த ஹெட்போன புடுங்கி கேட்டப்பதான் இந்தப் பாட்டு வந்துது!! இந்த பாடலைப் பாடிய மாதங்கி அருள்பிரகாசம் ( M .I .A .) தமிழ்ப் பொண்ணாமே..அதான் இந்தா மாதிரி சூப்பர் சாங் அல்லாம் பாடிக்கிது போல!!
இந்த சாங் கேட்டதும் ஜீனோ மண்டைல டார்டாய்ஸ் சுத்தி [அதாம்ப்பா, ப்ளாஷ்பேக்கு!:) ] மலரும் நினைவுகள்!! சின்னப் புள்ளயா இருந்த காலத்துல இது போன்ற சரித்திரப் புகழ் பெற்ற பாடல்கள்லாம் பாடி பெல்லாஸ் எல்லாம் வெளயாடுவோம்! இப்பல்லாம் சின்னூண்டு பசங்கள்லாம் ஒண்ணா கூடி வெளாட்றாங்களான்னே தெரில!! ஜீனோக்கு ஞாபகம் வந்த மற்றும் சில சாங்க்ஸ்-ம் உங்கள்க்காக..ஊட்டுல இருக்க புள்ள குட்டிங்களுக்கு பாடிக்காட்டுங்கோ..சரியா?
~~~~
பாடல் 1ஐஸ்-ஐஸ்-ஐஸ்! அஞ்சு பைசா ஐஸ்! ஆப்பிள் ஜூஸ்! நீ ஒரு லூஸ்! ~~~~
பாடல் 2ஏபிசிடி உங்கொப்பந்தாடி.. வந்தா வாடி! வராட்டிப் போடி! ~~~~
பாடல் 3உங்கம்மா எங்கம்மா டீச்சரம்மா.. உங்கப்பா எங்கப்பா தகர டப்பா உங்கக்கா எங்கக்கா முருங்கக்கா.. உங்கண்ணன் எங்கண்ணன் வெளக்கெண்ண ! உன்தம்பி என்தம்பி கரண்ட்டு கம்பி! ~~~~
இதுல இம்பார்டன்ட்டா ஜீனோக்கு பிரியாத மேட்டரு இன்னான்னா, பச்சப் புள்ளைங்களுக்கு "கடைக்காரனை பாத்து கண்ணடிக்கற" மாதிரி அடல்ஸ் ஒன்லி பாட்டு, போடி-வாடின்னு மரியாதை தெரியாத பாட்டு..கிண்டல் பண்ணும் பாட்டு எல்லாம் கண்டுபுடிச்சவங்க ஆருங்கரதுதான்!
ஓகை ஜீனோ..நீயும் சிந்திக்க ஆரம்பிச்சிடாதேன்னு ஜீனோ தன்னைத்தானே ஒரு உலுக்கு
உலுக்கிட்டு, பிரபுதேவா ஸ்டைல்-ல டான்ஸ் ஆடிகினே நடைய கட்டுது இப்போ..பை கண்ணுங்களா!!