Feb 15, 2010

ஆதங்கம்!!!இன்றைய தமிழகம்

ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம்

ஒருவர் கேட்டார் - எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?

நான் கேட்டேன் - கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கையை ஓட்ட முடியும்?

அவர் சிரித்தபடி சொன்னார் - என்னைப் பார்,1 ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டுவிட்டு உறங்கிடுவேன்,

போரடித்தால்
வண்ணத் தொலைக்கட்சியில் திரைப்படம் பார்த்திடுவேன்,

உழைக்காமல்
நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடிடுவேன்,

உயர்
சிகிச்சை பெற்றிடுவேன் ராஜ மரியாதையுடன்!!!

உழைக்காமல்
எப்படியப்பா இத்தனையும் முடியும்?

முதலாமவர்
சிரித்தபடி கேட்டார்..நான் யார் தெரியுமா?

தமிழ்
நாட்டுக் குடிமகன்

என்
நாட்டில் உணவுக்கு அரிசி 1 ரூபாய்

சமைப்பதற்கு
கேஸும் அடுப்பும் இலவசம்

பொழுதுபோக்கிற்கு
வண்ணத் தொலைக்காட்சி மின்சாரத்துடன் இலவசம்

குடும்பத்துடன்
உயிர்காக்கும் உயர் சிகிச்சையும் இலவசம்

எதற்காக
உழைக்க வேண்டும்?

நான்
கேட்டேன் - உன் எதிர்கால சந்ததியின் நிலை என்ன?

பலமாக
சிரித்தபடி உரைத்தார்

மனைவி
பிள்ளை பெற்றால் ரூபாய்5,000 இலவசம் சிகிச்சையுடன்

குழந்தை
க்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில்,

படிப்பு
சீருடையுடன், மதிய உணவு முட்டையுடன் இலவசம்,

பாடப்
புத்தகம் இலவசம்..படிப்பும் இலவசம்..பள்ளி செல்ல பஸ் பாஸும் இலவசம்,

தேவையென்றால்
சைக்கிளும் இலவசம்,

பெண்
பருவமடைந்தால் திருமண உதவித்தொகை ரூபாய்25,000 இலவசம்,

1 பவுன் தாலியுடன் திருமண செலவும் இலவசம்,

தேவையென்றால்
மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம்,

மகள்
பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கையிலும்.

நான்
எதற்கு உழைக்க வேண்டும்!!!

வியந்து
போனேன் நான் !!என்
உயிர்த் தமிழகமே எவ்வளவு காலம் இந்த நிலை தொடரும்?

இலவசம்
என்பதற்கு இரண்டு அர்த்தமுண்டு

ஒன்று
கையூட்டு மற்றொன்று பிச்சை !!!

இதில்
நீ எந்த வகை?எதை எடுத்துக் கொள்வது?
உழைக்காமல்
உண்டு சோம்பேறியாகிறாய் - இலவசம் நின்று போனால் உன் நிலை?

உழைப்பவர்
சேமிப்பைக் களவாடத் தலைப்படுவாய்!!!

இதே
நிலை தொடர்ந்தால் - இலவசம் வளர்ந்தால்

அமைதிப்
பூங்காவாம் தமிழகம் கள்வர் பூமியாய் மாறும் நிலை

இன்னும்
வெகு தொலைவில் இல்லை

தமிழா
விழித்தெழு - உழைத்திடு

இலவசத்தை
வெறுத்திடு - அழித்திடு

தமிழகத்தைத்
தரணியில் உயர்த்திடு

நாளைய
தமிழகம் உன் கையில்

உடன்பிறப்பே
சிந்திப்பாயா??


-- மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி

யூ கய்ஸ் ஆல்ரெடி நோ..ஜீனோ சிந்திக்கரதில்லை..நீங்கள் எல்லோரும் சிந்திப்பீங்களே என்ற சமூக அக்கறையில் மின்னஞ்சலில் வந்த ஒரு ஆதங்கம்..ஜீனோவின் கார்னரிலே!

பி.கு. இந்தப்பதிவுக்கும் கடைசியில் இருக்கும் கலர் கண்-மணிக்கும்:) யாதொரு தொடர்புமில்லை..சும்மா..க்யூட்டா இருக்கேன்னு..ஹி,ஹி,ஹி!!!

13 comments:

 1. இது கலியுகம் ... எல்லாம் தலைக்கீழாய் மாறவேண்டும் அல்லவோ?

  //பி.கு. இந்தப்பதிவுக்கும் கடைசியில் இருக்கும் கலர் கண்-மணிக்கும்:) யாதொரு தொடர்புமில்லை..சும்மா..க்யூட்டா இருக்கேன்னு..ஹி,ஹி,ஹி!!!// ஆமாம், ஆமாம்.

  ReplyDelete
 2. அதான் பாத்தன்.. என்னடாயிது திடீர்ன்னு ப்ரொக்ராம் ஏதாச்சும் அப்டேட் பண்ணிட்டாங்களா, ஜீனோ திங்க் பண்ண ஆரம்பிச்சுடுச்சேன்னு பாத்தன்..

  இதல்லாம் கொடுத்தும் தினம் உழைத்தும் அவங்க பாடு திண்டாட்டந்தான் ஜீனோ.. இத்தனை சலுகை இருந்தாலும் ஒன்னு அவங்களுக்கு இதப் பத்தி தெரிஞ்சிருக்காது இல்லாட்டி அதுக்கெல்லாம் அவங்களால லஞ்சம் கொடுத்து மாள முடியாது.. எழுதின நண்பர் ஏழ்மையான உழைக்கும் வர்க்கத்த பாத்ததேயில்லன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. ஆ... என் உடப்பிறப்போ... இத்தனையையும் சிந்தித்து, இலைமறைகாயாக எத்தனை விஷயங்களை எழுதியிருக்கிறார் என ... அதே மேலேயுள்ள பப்பி.. வாய் திறந்திருப்பதுபோல திறந்தபடி படித்துக்கொண்டே வந்தேனோ..., கொசுமெயிலில் வந்தது என்பதைப் பார்த்ததும் ... மல்லாக்கப்படுத்திட்டேன்... பூஷாரைப்போல...:).

  //பி.கு. இந்தப்பதிவுக்கும் கடைசியில் இருக்கும் கலர் கண்-மணிக்கும்:) யாதொரு தொடர்புமில்லை..சும்மா..க்யூட்டா இருக்கேன்னு..ஹி,ஹி,ஹி!!!// ஆமாம், ஆமாம்.//// கிக்...கிக்....கிக்....கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ...

  சீரியசாக படித்துக்கொண்டுவந்தேன் பூஷாரைப் பார்த்ததும்.. முகம் சீரியஸை மறந்துபோச்சு... தொடருங்கோ ஜீனோ..

  சந்து கூல் டவுண்.... கூல் டவுண்...

  முதலில் நம்மைத் திருத்துவோம்... உலகம் தானாகத் திருந்தும்...

  ஒரு ...வெளிநாட்டிலிருந்து, சில வருடங்களுக்கு முன் ஒருகுடும்பம் ஊருக்கு வந்தார்களாம்... வானிலிருந்து(van) பிள்ளைகளை இறக்கினாராம்(எல்லோரும் நித்திரையாம்)... கீழே நிண்டவர்கள் எண்ணினார்களாம்... ஆறு பிள்ளைகளாம்... பொறுக்கமுடியாமல் ஒருவர் கேட்டாராம்... இந்தக்காலத்திலும் ஆறு குழந்தைகள் அதுவும் வெளிநாட்டிலிருந்து பெற்றிருக்கிறீங்கள் என்று. அதுக்கு அத் தந்தை சொன்னாராம். நான் இருக்கும் நாட்டில் நிறையக் குழந்தைகள் பெற்றால். அரசாங்கம் நிறையப் பணம் தரும் வசதியாக இருக்கலாம் என்று.

  ReplyDelete
 4. அண்ணாமலை அண்ணே, வருகை தந்து ஜீனோஸ் கார்னரை கவுரவித்தமைக்கு நன்றி!
  ஹைஷ் அண்ணே, தாங்களும் தவறாமல் வருகை வந்து ஜீனோஸ் கார்னரின் ஒவ்வொரு பதிவையும் சிறப்பிப்பதற்கு நன்றி! அழகான ஒரு சோடிக் கண்கள்..இல்ல ஹைஷ் அண்ணா??:) :)


  ஆத்தீ..எல்போர்டு ப்ரோபைல் போட்டோவப் பார்த்தாலே "கிடு-கிடு"ன்னு வருதே..ஏன் இந்த அதிரடி மாற்றம் எல்போர்டு??

  //ப்ரொக்ராம் ஏதாச்சும் அப்டேட் பண்ணிட்டாங்களா// நோ சான்ஸ்!! ஜீனோஸ் ப்ரோக்ராம் வாஸ் ரிட்டன் லாங் பேக்,யூ நோ? இப்ப இருக்கற டுபாக்கூர் சைன்டிஸ்ட் அல்லாம் அண்ணாத்த ப்ரோக்ராம்-ஐ டச் கூடோ பண்ண முடியாது.:DX5

  அதிராக்கா..அது நெசந்தான்..பல வெளிநாடுகள்ள நெறியா குட்டீஸ் இருந்தா டேக்ஸ் பெனிபிட்ஸ் ஜாஸ்தி..ஹி,ஹி!!

  //எழுதின நண்பர் ஏழ்மையான உழைக்கும் வர்க்கத்த பாத்ததேயில்லன்னு நினைக்கிறேன்.// அது உண்மைதான் எல்போர்டு..கீழ்மட்ட மக்களுக்கெல்லாம் இது போய்ச் சேருமா என்பது "???"தான்..இந்த நண்பர் 'பர்ட்'ஸ் ஐ வியூ'-ல பாத்திருக்கார் போல!

  //கிக்...கிக்....கிக்....கீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ...// இப்பூடி கிளி மாதிரி சிரிச்சு பயங்காட்டக்குடாது அதிராக்கா..ஏற்கனவே ஜீனோ சீரியசான எல்போர்டைப் பாத்து நடுங்கிட்டு நிக்கிது!

  ReplyDelete
 5. //ஆ... என் உடப்பிறப்போ... இத்தனையையும் சிந்தித்து, இலைமறைகாயாக எத்தனை விஷயங்களை எழுதியிருக்கிறார் என ... அதே மேலேயுள்ள பப்பி.. வாய் திறந்திருப்பதுபோல திறந்தபடி படித்துக்கொண்டே வந்தேனோ..., கொசுமெயிலில் வந்தது என்பதைப் பார்த்ததும் ... மல்லாக்கப்படுத்திட்டேன்... பூஷாரைப்போல...:).//

  நானிங்க விழுந்து விழுந்து சிரிக்கறேன் அதிரா.. தாங்க முடியல்ல உங்க லொல்லு...

  ச்சும்மா தான் ஜீனோ.. இல்லாட்டி சில அறிவாளிகள் நம்மள பாத்து ஜோக்கர்ன்னு நினைச்சுப்பாங்க.. இனிமே எப்பவும் இப்படித்தான் இருக்கப் போறேன்.. :)))))))))))))

  ReplyDelete
 6. //நானிங்க விழுந்து விழுந்து சிரிக்கறேன் // keep the First aid box with you..kik..kik..ki..:D :D :D

  ReplyDelete
 7. More than the post i am liking the comedy comment marathaon :))

  oh.. btw... post.. i dont know if i care about it eoungh to comment ...this is the case many places...pazaki poochu...

  ReplyDelete
 8. koncha naal kaanaamal poy thirumpa vanthaal, payankara shock adichcha maathiri aakip pochchu - idukai paarththu.

  ithu kooda oru vakaiyil 'thinking' thaan puppy.

  ReplyDelete
 9. ஆஹா ஜீனோ பொறுப்பா சிந்திக்கற மாதிரி டோரா புஜ்ஜி புரோகிராம் பண்னிட்டாங்களோன்னு நினச்சா...
  சரி சரி அதை எங்களோட பங்கு போட நினைச்சுக்கிட்டதால சலாம் போட்டுக்கறேன் :-)

  இன்னொரு விஷயம் தெரியுமா வெளிநாட்டுல இருக்கற நாமளும் இனி வோட்டு போடலாமாம். நம்ப பிரதமர் மன்மோகன் சிங் சொல்லியிருக்கிறார்(எந்த காலத்துலன்னு மட்டும் கேட்கக் கூடாது). அதனால் இனிமே நமக்கு ஏர்போர்ட்டிலிருந்து வீட்டுக்குப் போக இலவச ஏசி பஸ் வசதி செய்து கொடுக்கப் போறாங்களாம் தமிழக அரசு சார்பில் :-)

  ReplyDelete
 10. இலாக்கா, ஆன்ட்டி, கவிசிவா அக்கா, டாங்க்ஸ் பார் ஸ்டாப்பிங் பை!

  //comedy comment marathaon :))// வில் கன்டினியூ @ ஜீனோஸ் கார்னர் இலாக்கா..சிரிக்கவாவது அடிக்கடி வாங்கோ! எண்டு ஜீனோ கேட்டுக் கொல்கிறது.

  //ithu kooda oru vakaiyil 'thinking' thaan puppy.// டாங்க்ஸ் ஆன்ரி..ஆனால் இத்தனாம் பெரீய்ய போஸ்ட்டை தட்டி முடிக்கேக்க ஜீனோவின் நாலு காலும் கழண்டு போச்சு..புஜ்ஜிதான் ஸ்க்ரூ டிரைவர், ஸ்பேனர் எல்லாம் கொண்டு பிக்ஸ் பண்ணித் தந்ததாக்கும். :D ;)


  // டோரா புஜ்ஜி புரோகிராம் பண்னிட்டாங்களோன்னு// ஹா..ஹா..ஆனானப்பட்ட சைண்டிஸ்ட்டே ஜீனோ ப்ரோக்ராம்ஸ்-ஐ டச் கூடோ பண்ண முடியாதப்போ,புஜ்ஜி மட்டும் டச் பண்ணிடுமா இன்னா கவியக்கா??

  //ஏர்போர்ட்டிலிருந்து வீட்டுக்குப் போக இலவச ஏசி பஸ் வசதி செய்து கொடுக்கப் போறாங்களாம் தமிழக அரசு சார்பில் :-)// மெய்யாலுமா? ஜீனோ மெட்ராசில எறங்கினா கன்யாகுமாரில கீற ஜீனோ ஊட்டுக்கு ப்ரீ ஏசி பஸ்ஸா??
  ங்கொய்யால..இதுக்காச்சும் இண்டியா ட்ரிப் போடோணும் போல கீதே?

  ReplyDelete