“செய்... அல்லது செத்துமடி...” ---- நேதாஜி..
“படி.. அல்லது பன்னி மேய்...” --- எங்கபிதாஜி....
(பை த பை, இந்தா மாதிரி க்யூட் பிக்லட்ஸ்:) இருந்தா பன்னி மேய்க்கறதும் ஃபன்னியாத் தான இருக்கும்??)
^^^^^****^^^^^
மகன்:அப்பா! ஓவரா என்னை பக்கத்துவீட்டுப் பொண்ணோடகம்பேர் பண்ணிக்கிட்டு இருப்பியே... இப்பபாரு... அவ 470 மார்க்.. நான்480 மார்க்.
அப்பா:சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா!
அப்பா:சனியனே... அவ பத்தாவது படிக்கிறா... நீ +2 படிக்கிரடா!
^^^^^****^^^^^
மனைவி கணவனுக்கு இலக்கணம் சொல்லிகொடுக்கிறாள்.
மனைவி: நான் ரொம்ப அழகு... இது என்ன காலம்? (Tense)
கணவன்: அது ஒரு இறந்தகாலம்....
^^^^^****^^^^^
போலீஸ்: பஸ் எப்படி விபத்தில் சிக்கியது?
டிரைவர்: அதான் எனக்கும் புரியல சார்... நான் நல்ல தூக்கத்தில இருந்தேன்.
^^^^^****^^^^^
மனசுஇருந்தா“SMS” பண்ணுங்க...அன்புஇருந்தா“Picture Message” அனுப்புங்க..
காசுஇருந்தா“Call” பண்ணுங்க..
இது எல்லாமே இருந்தா ஒங்க“செல்”ல கொரியர்’ல அனுப்புங்க....
^^^^^****^^^^^
^^^^^****^^^^^
தேர்வுஅறையில்...மாணவன்: ஆல்திபெஸ்ட்!
மாணவி:ஆல்திபெஸ்ட்!
மாணவன்பெயில்.... மாணவி80%
நீதி: நல்லவங்க வாக்கு மட்டும்தான் பலிக்கும்....
^^^^^****^^^^^
நாட்டாமை: என்ரா... பசுபதி...எக்ஸாம்’க்குபெவிகால்எடுத்துட்டுப்போற?
பசுபதி: அய்யா.. கொஸ்டின் பேப்பர் லீக் ஆகிப்போச்சாம்..
நாட்டாமை:என்ர தம்பி சிங்கம்டா.. சிங்கம்டா..... சிங்கம்டா..
^^^^^****^^^^^
ஆசிரியர்:எவன் ஒருவனால் ஒரு விசயத்தை மற்றவர்களுக்கு புரியவைக்க முடியவில்லையோ அவன் ஒரு முட்டாள்...
மாணவர்கள்:புரியலசார்...
^^^^^****^^^^^
லவ் லட்டருக்கும், எக்ஸாம்’க்கும் என்ன வித்தியாசம்?லவ்லெட்டர்: மனசுக்குள்ள நிறைய இருக்கும்.. ஆனா எழுத வராது...
எக்ஸாம்: மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது... ஆனா நிறைய எழுதுவோம்... எப்பூடி?
^^^^^****^^^^^
கணவன்: காலெண்டர்’ல என்ன பாக்குற?
மனைவி: பல்லி விழும் பலன்...
கணவன்: கொண்டா.. நான் பாக்குறேன்... அதுசரி... பல்லி எங்க விழுந்தது?
மனைவி: நீங்க சாப்ட்ட சாம்பார்ல...
^^^^^****^^^^^
சைன்டிஸ்ட் எல்லாம் சொர்க்கத்தில் கண்ணாமூச்சிவிளையாடிட்டு இருக்காங்க.. நம்ம ஐன்ஸ்டீன் கண்டுபிடிப்பவர்... ஆனால் நியூட்டன் ஒளிந்துகொள்ளாமல் ஒருமீட்டர் சதுரத்தில் நிற்கிறார்.....
ஐன்ஸ்டீன்: நியூட்டனைக் கண்டுபிடித்துவிட்டேன்....
நியூட்டன்: இல்லை... தவறு... நான் நியூட்டன் இல்லை.. நான் ஒருமீட்டர் சதுரத்தில் நிற்கிறேன்.. நான் நியூட்டன்/மீட்டர்.. எனவே நான் இப்போது பாஸ்கல்....
ஐன்ஸ்டீன்: ராஸ்கல்... என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு....?
^^^^^****^^^^^
நம்ம அய்யாச்சாமி நடுஆற்றில் படகில் போய்க் கொண்டிருக்கிறார்... அப்போது தூரத்தில் ஒரு போர்டு உள்ளதைப்பார்த்து அதில் என்ன எழுதிஇருக்கிறது என்று படிக்கமுயல்கிறார். ஆனால் அவரால் படிக்கமுடியவில்லை... எனவே அவர் படகிலிருந்து குதித்து நீந்தி சென்றுபடிக்கிறார்...
“இங்கு முதலை உள்ளது...யாரும் இங்கே நீந்த வேண்டாம்.”
^^^^^****^^^^^
நம்ம சூப்பர்ஸ்டார் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு படத்தில் நடித்தால் பன்ச் டயலாக் எப்படி இருக்கும்?
* நான் ஆபீசுக்கு லேட்’டா வந்தாலும் லேட்டஸ்ட் சாப்ட்வேரோடத்தான் வருவேன்...
* J to the A to the V to the A --- JAVA
* கண்ணா... வைரஸ்தான் கூட்டமா வரும். ஆண்ட்டிவைரஸ் சிங்கில்’லாத்தான் வரும்.
* C க்குஅப்புறம்C++... எனக்குஅப்புறம்NO++
* நான் பாக்குறதுக்குதான் ஹார்ட்வேர் மாதிரி.. ஆனா என் மனசு சாப்ட்வேர் மாதிரி...
^^^^^****^^^^^
வாழ்கையின்முக்கியஏழுநிலைகள்.(Stages)
1. படிப்பு
2. விளையாட்டு
3. பொழுதுபோக்கு
4. காதல்
5.
6.
7.
ஹலோ... என்ன தேடுறீங்க?
காதல் வந்தபிறகுதான் எல்லாமே நாசமாப்போயிருமே...!
கவுந்தடிச்சு படுத்துக் கனா காண வேண்டியதுதான்..போத்திகிட்டு படுத்தாலும் ஓகே..படுத்துட்டு போத்தினாலும் ஓகே! ஹி,ஹி,ஹீ!
ஜீனோ.... எத்தனை முறை படித்தாலும் அலித்துப்போகாமல் புதுசாப்படிப்பதுபோலவே நினைத்துச் சிரிக்கவைக்கும் ஜோக்குகள். என் ஹொபியில் இதுவும் ஒன்று. இப்படி நிறையத்தேடி எடுத்து கொப்பியில் எழுதி வைத்திருக்கிறேன்.
ReplyDeleteமேலே உள்ளதில் ஐன்ஸ்ரைன்ஸ் ஜோக் மட்டுமே நான் பார்க்காதது. இன்னும் தேடிப் போடுங்கோ.
காதல் ஜோடியும், போர்த்திட்டுப்படுப்பதும் பப்பி மாதிரித் தெரியவில்லையே.... எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்!!!! சந்தனா வந்து மிகுதியை முடிப்பார்...
அந்த ரோஜாப்பூப் பப்பி சுவீட் கியூட்.
கவுந்தடிச்சு படுத்துக் கனா காண வேண்டியதுதான்/// கிக்....கிக்.....கிக்.....
கலக்குங்க ஜீனோ
ReplyDeleteஹா ஹா ஹா.. நைஸ் ஜீனோ..
ReplyDelete//சந்தனா வந்து முடிப்பார்// எங்க, எதுவுமே சொல்லலையே!!
ReplyDeleteஅது bow கட்டிய பப்பி, அதீஸ். ;)
பப்பி, எனக்கு ரெண்டு இடத்துல கடைசிச் சொற்கள் முடியாம அந்தரத்தில தொங்குது. என் நெட்ல பிரச்சினையா!! ;( ஒரு வேளை பப்பி கடிச்ச கடியோ!! ;)
ஜீனோ சூப்பர் ஜோக்ஸ் நானும் ஐன்ஸ்ரைன்ஸ் ஜோக் மட்டுமே படிக்கவில்லை :) பார்த்ததில் பிடித்தது...
ReplyDeleteகாதலுக்கும் நட்புக்கும் என்ன வித்தியாசம்: பழைய காக்கா-ஆயா-வடை கதைதான்.
காதல் என்பது ஆயா சுடும் வடை போல் யார்வேண்டுமாலும் அல்லது எந்த காக்காய் வேண்டுமானலும் தூக்கி கொண்டு போய்விடும்.
நட்பு என்பது வடையை சுடும் ஆயாவைப் போல் யாருமேஏஏஏஏ தூக்கிகொண்டு போக மாட்டார்கள் :)
உபயம்: தீராத விளையாட்டு பிள்ளை -சந்தானம்
////கவுந்தடிச்சு படுத்துக் கனா காண வேண்டியதுதான்/// கிக்....கிக்.....கிக்.....//// கர்ர்ர்ர்...ர்ர்ர்...இதுக்கென்ன இப்பூடி ஒரு சிரிப்பு? காம் டவுன் ஜீனோ..காம் டவுன்! அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அது ----- சிரிப்பூ!
ReplyDelete//கலக்குங்க ஜீனோ// இப்பூடி மொட்டையா சொன்னா எப்பூடிங்கோ அண்ணாத்த? இன்னாத்த கலக்க? கரீக்டா சொல்லிடுங்கோ..ஓ..ஓ! இல்லாங்காட்டி, ஜீனோ கண்டபடி:) ஏதாவது கலக்கி வைச்சிடும்.. ;)
//ஹா ஹா ஹா.. //**** ஜானி,ஜானி, எஸ் பாப்பா!... ஈட்டிங் சுகர் நோ பாப்பா..டெல்லிங் லைஸ்? ..நோ பாப்பா...ஓபன் யுவர் மவுத்...**** தீஸ் லைன்ஸ் ஆர் மிஸ்ஸிங் எல் போர்ட்..பீ சீரியஸ்,ஓகை??
ஆன்ட்டி, ஜீனோ அல்லாத்தையும் கரீக்டா தான் தட்டிக்குது..உங்கள்க்கு என்ன வர்ட் தெரிலன்னு ஜீனோக்கும் தெர்ல ஆன்ட்டி! :( எல்லாம் போடாதீங்கோ..ஜீனோக்கு அழுவாச்சி வந்துடும்.
//தீராத விளையாட்டு பிள்ளை -சந்தானம்// ஓஹோ..நீங்க 'அந்த' சந்தானத்த சொன்னீகளா ஹைஷ் அண்ணே? ஒன் நிமிட், ஜீனோ 'இந்த' சந்தானமாக்கும்னு நினைசிடுச்சி..ஹி,ஹி! நேரமில்லைன்னு சொல்லிட்டே லேட்டஸ்ட் படம் எல்லாம் பாத்துப் புட்டீக போல? ஜூப்பரு!
அல்லாரும் சைக்கிள் கேப்புல ஜீனோஸ் கார்னருக்கு வந்ததுக்கு டாங் ஸூ..டாங் ஸூ..டாங் ஸூ..டாங் ஸூ..டாங் ஸூ..டாங் ஸூ[ஆத்தீ..அஞ்சு பேருக்கும் டாங் ஸூசொல்லிட்டமா?]
ஜீனோ சகோதரி சுபத்ரா நீல் சொன்ன சந்தானம் யார் என்றே எனக்கு தெரியாது.... சும்மா எல்லாம் மாட்டி விட கூடாது...
ReplyDeleteஎன்ன பண்ணுறது ஓபாமாவுக்கும் 24 மணிநேரம்தான் ஆனால் உலகையே ...நமக்கும் 24 மணிநேரம்தான்... அதான் சைக்கிள் கேப்பில் நகைசுவை மட்டுமாவது பார்த்து விடவேண்டியதுதானே :)
ணா...நீங்க சொன்னா சரிதானுங் ணா!
ReplyDelete(இளைய தளபதி விசய்:) ஸ்டைல்-ல படிங்கோ மக்கள்ஸ்!)
'ப்ளைட் காப்ல'
ReplyDeleteசரியாச் சொல்லுங்கோ ஹைஷ். ;)
நல்ல நகைச்சுவை... அதெப்படி ஜீனோ உன்னை மட்டும் ஓட்ட கூட்டமா வர்ராங்க... நீயும் சளைக்காம பம்மாம இருக்கே... டோரா நல்ல டிரெயினிங் தான் கொடுத்திருக்கு...
ReplyDeleteஅங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும், அது ----- சிரிப்பூ!// ஜீனோ இந்த இடைவெளியை நிரப்பிடுங்கோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஒ..... இல்லாட்டில்.... பயந்திட்டீங்களா? ஒண்ணுமே பண்ணமாட்டேன்..கிக்..கிக்...கிக்..
ReplyDeleteஇமா வடிவாப்பார்த்தனீங்களே.. பப்பி ”போ” மட்டும்தான் கட்டியிருக்கு... கடவுளே வாணாம் விட்டுடுவோம்...
ஹைஷ் அண்ணன் விழுந்து விழுந்து .... சிரித்துவிட்டேன் உங்கள் ஜோக் பார்த்து... ஆனாலும் என்ன அது ஆயாவை யாருமே தூக்கிடுப்போகமாட்டினமோ?.. நிறைய இடத்தில ஆயாவைத்தான் தூக்கினதா கேள்விப்பட்டேனே... :). நல்லவேளை ஜீனோவால சந்தானத்தை அறிந்தேன்.. இல்லாவிட்டால் அமெரிக்காப்பாட்டி மாட்டியிருக்கும்:).
கடவுளே... என்ன ஒரு ஒப்பீடு ஒபாமா = ......., வாணாம் எனக்கெதுக்கு ஊர்வம்ஸ்....
தொடருங்கோ ஜீனோ.. இலா அக்காவுக்கு வயிறெரியுதாம் கொஞ்சம் மோர் கொடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. அக்கா எஸ்கேப்...
/ஒண்ணுமே பண்ணமாட்டேன்..கிக்..கிக்...கிக்../ இதைப் படித்த பின்னும் ஜீனோ பில்லப்:) பண்ணிடும் எண்டு நினைக்கறீங்களோ ஆரும்?? அப்போ நீங்க ரொம்போ அப்பாவீ...ஹி.ஹி,ஹீஈ!!
ReplyDelete/பப்பி ”போ” மட்டும்தான் கட்டியிருக்கு... கடவுளே வாணாம் விட்டுடுவோம்.../ நோ கமெண்ட்ஸ்..ஸ்ட்ரிக்ட்லி நோ கமெண்ட்ஸ். :-| :-| :-|
ஆஹ்..சிறுமான் கும்பலைக் கண்டு ஆண்சிங்கம் அஞ்சிடுமோ? கர்ர்...ர்ர்..ர்ர்!! ( இது ஆர்டினரி 'கர்' இல்லை மக்கள்ஸ்.. ஹ்ம்ம்..ஸிம்ஹ கர்ச்சனை!!!)
ஜீனோ கேரக்டரே அப்பூடித்தான் இலாக்கா..கூச்சப்படாம உளறிக் கொட்டி கெளறி மூடிட வேண்டியதுதான்.:D
/இலா அக்காவுக்கு வயிறெரியுதாம்/ ஈஸிட் ஸோ இலாக்கா? எஸ் எண்டு சொன்னால் நீர் மோர்..நோ எண்டு சொன்னால் நோ மோர்! வாட் யூ ஸே?
வயிறெல்லாம் எரியலை ஜீன்ஸ்... எப்படி இப்படி சங்கோச படாம யார் கும்முனாலும் வாங்கிறியே... முடியல தம்புடு முடியல....
ReplyDeleteஹைஷ் அங்கிள்!!! ஆயா .... கிக்...கிக்...கிக்...
இமா ://...'ப்ளைட் காப்ல' சரியாச் சொல்லுங்கோ ஹைஷ். ;)// யூ மீன் Cap? அது ரொம்ப வெய்ட்டா இருக்கும் :)
ReplyDeleteஇலா ஏன் இவ்வளவு ஆச்சர்யம் ஜீனோ “ரொம்ப நல்லவருன்னு” பேசிக்கிட்டாங்க அதேன் இப்பூடி...:)
ஹைஷ் அண்ணா, பைலட்டும் ஹெல்மட் போட வேணுமோ!! ;)
ReplyDelete//காதல் வந்தபிறகுதான் எல்லாமே நாசமாப்போயிருமே...!//
ReplyDeleteஇப்ப இதை எதற்கு ஜீனோ சொல்லுது என்பது புரியவில்லை. விளக்கம் ப்ளீஸ்.
எனக்குப் புரியுது, புனிதா.
ReplyDeleteஇமா, கடைசி 2ம் எழுதுவதற்குள் ஜீனோவின் மானேஜர் வந்து லெப்ட் ரைட் வாங்கி..... பாவம் ஜீனோ. சும்மா நோண்டக் கூடாது. ஜீனோவின் வலி எனக்குப் புரியுது.
//இப்ப இதை எதற்கு ஜீனோ சொல்லுது என்பது புரியவில்லை. விளக்கம் ப்ளீஸ்.//
ReplyDeleteஜீனோ ஒரு காமெடிக்கு சொல்லுதுங்கோ புனிதா..ஏன், சொல்லக் கூடாதா? கூடாதா? கூடாதா?(உஷ்..அப்பப்பா, இஷ்டப்படி பேசக் கூடோ உட மாட்றாங்களே.. )
தோடா..ஜீனோ சிஸ்டர் வந்து உங்கள்கு விளக்கம் கொடுத்திருக்காங்க போல கீது.
மேனேஜர்??அந்த கொடுமல இருந்து கொஞ்சம் நேரம் ப்ரீயா இருக்க ப்ளாக் பக்கம் ஒதுங்கினா...கர்ர்...ர்..ர்ர்ர்ர்...நீங்க மர்க்கா,மர்க்கா அதே மூஞ்ச ஞாபகம் படுத்தினா எப்பூடி வாணியக்கா?? கிர்ர்ர்...ர்ர்...ர்ர்!!
வாணீ... உங்களுக்கு ஒண்டுமே புரிய இல்லை எண்டு எனக்குப் புரியுது. ;D சும்மா எல்லார்ட்டயும் 'புரியுது, புரியுது' எண்டு சொல்லாதைங்கோ. ;) உங்களைச் சுற்றி ஏமாற்றுக்காரர் யாராவது இருந்தாலும் இருப்பினம், கவனமா இருங்கோ. ;)
ReplyDeleteஇமா, இப்படி அல்ல வேறு எப்படிக் கேட்டாலும் எனக்கு புரிந்ததை உங்களுக்கு கட்டாயம் சொல்ல மாட்டேன்.
ReplyDelete// உங்களைச் சுற்றி ஏமாற்றுக்காரர் யாராவது இருந்தாலும் இருப்பினம், கவனமா இருங்கோ.// ;)எனக்கு பால் வடியும் முகம் என்று எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் எளிதில் ஏமாற மாட்டேன். ;D
hahaa! hahahahaaa! ;D x 1ooo.....1
ReplyDeleteadikka varaathainko. ;)
//இப்படி அல்ல வேறு எப்படிக் கேட்டாலும் எனக்கு புரிந்ததை உங்களுக்கு கட்டாயம் சொல்ல மாட்டேன்.// கரீக்ட் வாணியக்கா..ஜூப்பர்!! இப்பூடியே ஸ்ரெறியா இருங்கோவன்..ஆன்ரீ உங்களைக் குயப்ப முயல்கிறார்..பீ வேர்!
ReplyDelete//adikka varaathainko. ;)// இல்ல ஆன்ரீ...ஈ..ஈ..கடிக்கத்தான் வரம்..கர்...ர்ர்..வவ்..வ்வ்!!