Feb 9, 2010

பாட்டொன்று கேட்டு...பரவசமான ஜீனோ!


ஜீனோ என்ன பாட்டு கேக்குதுன்னு போன பதிவுல சஸ்பென்ஸ் வச்சி நோ யூஸ்!! ஜீனோவின் பதிவுகள் படிக்கும் அல்லாரும்,
"என்ன பாட்டு கேக்கறீங்க ஜீனோ? சீக்கிரமா சொல்லுங்கோ..அந்தப் பாடலைக் கேக்க நாங்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கிறோம்"

அப்படின்னு ஒருவர் மாற்றி ஒருவர் பின்னூட்டமா போட்டு தாக்குவாங்கன்னு பகல் கனா கண்டுக்கினு, ஜீனோ படா கெத்தா வெயிட் பண்ணிக்கினு இருந்திச்சி..

வயக்கம் போல அல்லாரும் கண்டுக்காம டீல்-ல உட்டு ஜீனோக்கு காஞ்சி போன பொற போட்டுட்டாங்க...

இட்ஸ் ஓகே-பா..இதுக்கெல்லாம் பீல் பண்ணறவங்களா நம்மல்லாம்? ஜீனோ டேக்ஸ் எவரிதிங் ஈஸி! நம்மளாவே சொல்லிப்புடுவோம்னு ஜீனோ கெளம்பிடுச்சி!


நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த பாடல் இதோ..இதோ..இதோ!!
~~~~
மொட்டப் பாப்பாத்தி.. ரொட்டி சுட்டாளாம்! உப்புப் பத்தலையாம்! கடைக்குப் போனாளாம்.. காசு பத்தலையாம்! கடைக்காரனைப் பாத்து கண்ணடிச்சாளாம்!
~~~~

சிரிக்காதீங்க பெல்லாஸ்! இங்கே போயி கேட்டுட்டு வாங்க!!
http://www.youtube.com/watch?v=ZrGzdJEEAJs&feature=related

நமக்கு இங்க்லீச் பாட்டெல்லாம் நெம்ப தூரம்! ஆனா புஜ்ஜி எப்பமே இங்கிலீஷ் சாங் தான் கேக்கும்.. ஒரு ப்ளூடூத் ஹெட்போன காதுல மாட்டிக்கினே சுத்தும்..அப்பூடி என்னதான் கேக்குதுன்னு ஒரு தபா ஜீனோ அந்த ஹெட்போன புடுங்கி கேட்டப்பதான் இந்தப் பாட்டு வந்துது!! இந்த பாடலைப் பாடிய மாதங்கி அருள்பிரகாசம் ( M .I .A .) தமிழ்ப் பொண்ணாமே..அதான் இந்தா மாதிரி சூப்பர் சாங் அல்லாம் பாடிக்கிது போல!!

இந்த சாங் கேட்டதும் ஜீனோ மண்டைல டார்டாய்ஸ் சுத்தி [அதாம்ப்பா, ப்ளாஷ்பேக்கு!:) ] மலரும் நினைவுகள்!! சின்னப் புள்ளயா இருந்த காலத்துல இது போன்ற சரித்திரப் புகழ் பெற்ற பாடல்கள்லாம் பாடி பெல்லாஸ் எல்லாம் வெளயாடுவோம்! இப்பல்லாம் சின்னூண்டு பசங்கள்லாம் ஒண்ணா கூடி வெளாட்றாங்களான்னே தெரில!! ஜீனோக்கு ஞாபகம் வந்த மற்றும் சில சாங்க்ஸ்-ம் உங்கள்க்காக..ஊட்டுல இருக்க புள்ள குட்டிங்களுக்கு பாடிக்காட்டுங்கோ..சரியா?
~~~~
பாடல் 1
ஐஸ்-ஐஸ்-ஐஸ்! அஞ்சு பைசா ஐஸ்! ஆப்பிள் ஜூஸ்! நீ ஒரு லூஸ்!
~~~~
பாடல் 2
ஏபிசிடி உங்கொப்பந்தாடி.. வந்தா வாடி! வராட்டிப் போடி!
~~~~
பாடல் 3
உங்கம்மா எங்கம்மா டீச்சரம்மா.. உங்கப்பா எங்கப்பா தகர டப்பா உங்கக்கா எங்கக்கா முருங்கக்கா.. உங்கண்ணன் எங்கண்ணன் வெளக்கெண்ண ! உன்தம்பி என்தம்பி கரண்ட்டு கம்பி!
~~~~
இதுல இம்பார்டன்ட்டா ஜீனோக்கு பிரியாத மேட்டரு இன்னான்னா, பச்சப் புள்ளைங்களுக்கு "கடைக்காரனை பாத்து கண்ணடிக்கற" மாதிரி அடல்ஸ் ஒன்லி பாட்டு, போடி-வாடின்னு மரியாதை தெரியாத பாட்டு..கிண்டல் பண்ணும் பாட்டு எல்லாம் கண்டுபுடிச்சவங்க ஆருங்கரதுதான்!

ஓகை ஜீனோ..நீயும் சிந்திக்க ஆரம்பிச்சிடாதேன்னு ஜீனோ தன்னைத்தானே ஒரு உலுக்கு உலுக்கிட்டு, பிரபுதேவா ஸ்டைல்-ல டான்ஸ் ஆடிகினே நடைய கட்டுது இப்போ..பை கண்ணுங்களா!!

15 comments:

 1. சூப்பர் ஜீனோ சின்னபுள்ளதனமா, எல்லோரையும் சின்னபுள்ளைகளா மாத்திட்டீங்களே :)

  வாழ்க வளமுடன்

  ReplyDelete
 2. ஆமா.. மாதங்கி தமிழ்ப் பொண்ணு.. இலங்கைப் புலம் பெயர் வாழ் தமிழருக்கு பொறந்த பொண்ணு.. இவங்க இப்ப இலங்கைப் போரப் பத்தி அறிக்கை விட்டப்ப தான் நான் இவங்களப் பத்தி தெரிஞ்சுகிட்டேன்..

  எப்படி ஜீனோ இப்படியெல்லாம்.. ஹிஹி.. எப்படி உங்களால யோசிக்கமுடியுது னு கேட்க வந்தேன்..

  ReplyDelete
 3. அட் ஆட்டத்த பார்ரா?

  ReplyDelete
 4. (வெரி ரேர்லி) %) கார ஜீனோவுக்கு:
  பாட்டைப் பார்த்து நீங்க அந்தக்காலம் எனச் சொல்லிடமுடியுமோ... போஸ் எல்லாம் பார்த்தால் அப்படித் தெரியேல்லை. அதிலயும் கடைசியாகக் கொடுக்கிறீங்க ஒரு போஸ்!!!!... நாகரீகமாக இருக்கு.. சைட்டில் நின்று திரும்பிப் பார்ப்பது.... மொத்தத்தில அடக்கொடுக்கமாக இருக்கு. கீப் இற் மேல ஜீனோ. டோராவின் பாட்டு பிடிச்சிருக்கு......

  (அதென்ன தலைப்பு? கடிபட்டவர் கருத்துக்கள்??.. ஓ.. மேலே இருப்பவர்களாக்கும் கிக்..கிக்..கி..இது கடிபடாதவரின் கருத்தாக்கும்..)

  ReplyDelete
 5. பாட்டில வர்ற வசனம் நமக்கே ஜீனோ சொல்லித் தான் புரியுது. அப்பிடி இருக்க தமிழ் தெரியாத டோரா என்னைத்தைக் கேட்குது!! ஐஐஐஐஓஓ!! ஒண்ணுமே புரியலை!! ;)

  //நாகரீகமாக இருக்கு.. சைட்டில் நின்று திரும்பிப் பார்ப்பது// ;D

  ReplyDelete
 6. ஹைஷ் அண்ணா, என்னாதிது இப்பூடி சொல்லிப் போட்டீங்கோ? நம்ம அல்லாருமே சின்னப்புள்ளைங்கதான? :)


  //எப்படி உங்களால யோசிக்கமுடியுது னு //எல்லாம் உங்களப் போன்ற அதிபுத்திசாலிகளின்:D :D சகவாச தோஷம்:) தானுங்கோ எல்போர்டு!! கிக்..கி ..கிக்!!

  //ஆட்டத்த பார்ரா?// ஆமாங்க்ணா..அண்ணாத்த ஆடறார்,ஒத்திக்கோ,ஒத்திக்கோ! தென்னாட்டு வேங்கைதான் ஒத்துக்கோ..ஒத்துக்கோ..நீங்களும் வாங்கோ..ஒரு டப்பாங்குத்து குத்துவம்!

  ReplyDelete
 7. //மொத்தத்தில அடக்கொடுக்கமாக இருக்கு.// ஹி,ஹி,ஹீ!! நன்றி அதிராக்கா!

  // தமிழ் தெரியாத டோரா என்னைத்தைக் கேட்குது!// ஆன்ட்டீ..இசைக்கு மொழி தேவையில்லையாம்..இப்பூடி புஜ்ஜி கிட்டவும் ஜீனோக்கு பொற வாங்கிக்குடுத்துட்டீங்களே!!

  //////நாகரீகமாக இருக்கு.. சைட்டில் நின்று திரும்பிப் பார்ப்பது// ;D/////
  நெம்ப ஓட்டினீங்க...ஜீனோ நேரா திரும்பி நின்னுடும்!! ஜாக்கிரத அதிராக்கா & ஆன்ட்டி!!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...வவ்..வ்வ்வவ்வ்வ்...!!

  ReplyDelete
 8. ஐயோ!!!!! வேணாம், வேணாம். நான் இனிமேல் ஓட்டலைய்ய்ய். ;)

  ReplyDelete
 9. குட் ஆன்ரி! கீப் இற் மேலே! :D :D :D

  ReplyDelete
 10. பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்,நான் அதை பாடவில்லை...
  ஜீனோ ,அக்கா வந்தா பாட்டோடு தான் வருவா.

  ReplyDelete
 11. /ஜீனோ ,அக்கா வந்தா பாட்டோடு தான் வருவா./குட் ஆசியாக்கா..நீங்களல்லோ ஜீனோவின் பாட்டுக்கார..ஸ்ஸ்...சாரி,பாசக்கார உடன்பிறப்பு?

  துபாய் நகைகடைல இருக்கற கோல்ட் ஜாக்கட் உங்கள்கு ஜீனோ பிரசன்ட் தருது..கீப்இற் மேலே!:DDDDDDDDDDDDD

  ReplyDelete
 12. எனக்கும் அந்த டான்ஸ் சொல்லிக் குடுக்கிரீங்களா?

  ReplyDelete
 13. நன்றி சொல்ல எனக்கு வார்த்தை இல்லையே.நீங்க பரோட்டா கடை ஆரம்பிக்கும் பொழுது சொல்லுங்க,kfc ரேஞ்சுக்கு empty salna -வை பாப்புலர் ஆக்கி விடலாம்.

  ReplyDelete
 14. //kfc ரேஞ்சுக்கு empty salna -வை பாப்புலர் ஆக்கி விடலாம்.// டபுள்..ட்ரிபிள் ஓகை ஆசியாக்கா!! கலக்கிடுவம்.
  :D :D

  ReplyDelete
 15. //எனக்கும் அந்த டான்ஸ் சொல்லிக் குடுக்கிரீங்களா?// சாரிங்கோ..அது முடியாத்...நாலு காலு இருந்தா மட்டும்தான் அந்தா மாரி டான்ஸ் பண்ணோ முடியும்! கிக்..கிக்..கிக்!!

  ReplyDelete