Jan 31, 2010

கேள்விகளால் ஒரு வேள்வி

தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் கிறுக்குத்தனமான பத்து கேள்விகள்...அந்தக் கேள்விகளுக்கு ஜீனோ போல ஒரு அதிபுத்திசாலி கொடுக்கும் பதில்கள்!

1 .இடம் - சினிமா தியேட்டர்
சிச்சுவேஷன் -நண்பர்கள்/ தெரிந்தவர்களை அங்கே பார்க்கறீங்க..அப்போது
கேள்வி :- ஹே....நீங்களா?...நீங்க இங்கே என்ன பண்ணறீங்க?
பதில்:- :உனக்குத் தெரியாதா...ரொம்ப நாளா நான் இங்கே ப்ளாக்- டிக்கட் விக்கறேன்.

2 . இடம் - நெரிசல் மிக்க பேருந்து
சிச்சுவேஷன் - பாயின்ட்டட் ஹை ஹீல் ஷூ போட்ட,
பிந்துகோஷ் சைஸ்-ல இருக்கும் ஒரு அம்மணி, உங்க கால நல்லா 'நச்'சுன்னு ஒரு மிதி வைச்சிட்டு..
கேள்வி :- அச்சசோ..சாரிங்க, தெரியாம மிதிச்சுட்டேன்..வலிக்குதா?
பதில் :- ச்சே..ச்சே..இல்லைங்க..நான் பாதத்துக்கு லோக்கல் அனஸ்தீஷியா போட்டிருக்கேன்..வேணும்னா, இன்னொரு முறை மிதிங்களேன்..வலிக்குதான்னு பாப்போம்!

3 . இடம் - கல்லறையில் ஒருவரை அடக்கம் செய்யும் தருணம்
சிச்சுவேஷன் - அழுதழுது கண் சிவந்து மூஞ்சி வீங்கிப் போன ஒருவர்...கடவுளிடம்..
கேள்வி :- ஏன்..ஏன்?? இத்தனை பேர் இருக்கும்போது இவரை உன்னோடு அழைத்துக் கொண்டீர் இறைவனே?
பதில் :- அவருக்குப் பதிலா கடவுள் உங்களை அழைத்துக்கொண்டிருக்கணுமா??

4 . இடம் - ஹோட்டல்
சிச்சுவேஷன் - வெயிட்டர்கிட்ட ஆர்டர் கொடுக்கும்போது
கேள்வி :- 'பனீர் பட்டர் மசாலா' டேஸ்ட் நல்லா இருக்குமாப்பா உங்க ஹோட்டல்-ல?
பதில் :- இல்லங்க..ரொம்ப கேவலமா இருக்கும்..சிமென்ட்,செங்கல் எல்லாம் போட்டுதான் செய்வாங்க..


5 . இடம்- ஒரு பேமிலி கெட்-டு கெதர்..
சிச்சுவேஷன் -தூரத்து சொந்தக்கார ஆன்ட்டி உங்களை வெகு
நாளைக்கப்புறம் பாத்துட்டு கேக்கறாங்க.
கேள்வி :- அடடே..முன்னா, நீ ரொம்ப பெருசா(!!??) வளர்ந்துட்டியே?
பதில் :- ஹி.ஹி..ஆமாம் ஆன்ட்டி..நீங்களும் கொஞ்சம் கூட சுருங்காம (??!!)அப்படியே இருக்கிங்களே?


6 .சிச்சுவேஷன் -உங்கள் தோழி தனக்கு கல்யாணம் முடிவாகி இருப்பதாக கூறுகிறார்..அப்போது நீங்க கேக்கறீங்க..
கேள்வி:- நீ கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளை நல்லவரா??
பதில்:- இல்ல..அவன் ஒரு புத்தியிலாத, பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கற கபோதியாம்..அதெல்லாம் எனக்கு முக்கியமில்ல,அவன் நல்ல பணக்காரன்! அது போதும்.


7 . இடம் :- பெட் ரூம்
சிச்சுவேஷன் - நடுராத்திரி..ஒரு போன் கால் வரும் சத்தம் கேட்டு முழிக்கறீங்க..
கேள்வி:- சாரி.. எழுப்பிட்டேன் போல இருக்கு..தூங்கிட்டீங்களா?
பதில்:-
நான் தூங்கிட்டிருந்தேன்னு நினைச்சிட்டீங்களா? நீங்க ஒரு லூசுங்க! இந்த ஆப்ரிக்கா பழங்குடி மக்கள் கல்யாணம் பண்ணிக்கராங்களா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தேன்..8 . சிச்சுவேஷன் - சொட்டைத் தலை/ போனி டெய்ல் / வெரி ஷார்ட் ஹேர் இருக்கும் உங்க நண்பர்/நண்பியிடம் ..
கேள்வி :- ஹேர்-கட் பண்ணிட்டு வந்திருக்கீங்களா?
பதில்:- இல்ல..இப்ப இலையுதிர்காலம்தானே? நானும் கொஞ்சம் முடி உதிர்த்துகிட்டு இருக்கேன்.


9 . இடம் - டென்டல் கிளினிக்
சிச்சுவேஷன்- டென்டிஸ்ட் உங்க வாய்க்குள்ளே எதையோ வைச்சு குத்தப் போறார்..
கேள்வி:- இத வைச்சு உங்க சொத்தைப்பல்லை கிளீன் பண்ணப்போறேன்..வலிச்சிதுன்னா சொல்லுங்க
பதில் :- இல்ல டாக்டர்..வலிக்கவே வலிக்காது..ரத்தம் மட்டும்தான் வரும்.


10 . இடம் - கேஃபடீரியா
சிச்சுவேஷன்- நீங்க ஜாலியா ஸ்மோக் பண்ணிட்டு இருக்கும்போது உங்க அழகான கேர்ள் ப்ரென்ட் வந்து..
கேள்வி:- நீங்க ஸ்மோக் கூடப் பண்ணுவீங்களா?
பதில் :- ஓ..மை காட்! இது என்ன அதிசயம்? ஒரு சாக்பீச வெளையாட்டா வாயில வைச்சிருந்தேன்..இப்போ அது புகையுதே!


ஹைய்யோ..எங்கிருந்து வாரங்க,இப்புடி கேள்வி கேக்கறவங்க எல்லாம்??


ஓகை..லைப் இஸ் கூல் ..காம் டவுன் ஜீனோ..காம் டவுன்!


ஜீனோ என்ன பாட்டு கேக்கரார்னு:) பாக்கறீங்களா? வெயிட் எ மினிட் பார் பைவ் மினிட்ஸ்..அது அடுத்த பதிவில்...

12 comments:

 1. ஜீனோ!!! ஜோக் எல்லாம் சூப்பர்..
  கொஞ்சம் தூரமா நின்னு பாட்டு கேளு இல்லை.. பாட்டு கேக்காதூஊ ஒரு காதில :))

  ReplyDelete
 2. இலாக்கா..உங்களை நண்பராய்ப் பெற ஜீனோ (மறுபடியும்) கொடுத்து வைச்சிருக்கணும்..தம்பி மேல அக்கறையோடு தள்ளி உக்காந்து பாட்டு கேக்கச் சொல்லும் உங்க நல்ல மனசு வேற யாருக்கு வரும்?? வருகைக்கு நன்றி இலாக்கா!

  சக்தியின் மனம் - வருகைக்கு நன்றி!

  வருகைக்கு நன்றிங்க எஸ்.எஸ்.!!

  ReplyDelete
 3. அண்ணே..அண்ணே..அண்ணாமலை அண்ணே, அழகா சிரிக்கரீங்கள்! மிக நன்று! அடிக்கடி வாங்கோ..சிரித்துட்டு போங்கோ!

  ReplyDelete
 4. ஜீனன்னே.. (என்ன அடுத்ததா அக்கான்னு கூப்பிடறதுக்குள்ளாற நானே முந்திக்கறேன்..)

  கடைசி கேள்வி செம பன்ச்.. ஹா ஹா..

  பயாஸ் கோப்பு ல வர்ற நாய்க்குட்டீஸ் எல்லாம் க்யூட் ஜீனோ (கவனிக்க.. உங்களச் சொல்லல..)

  ReplyDelete
 5. ஜீனோ!!!ஜீனோ!!! ஐஸ்கிறீம் கோனுக்குள்ளால அக்கா கூப்பிடுவது கேட்குதோ?

  அங்கேயும் காணவில்லை, இங்கேயும் காணவில்லை, அதனால்தான் என்னவோ ஏதோ என பதறிப்போய் இங்கு வந்தேன்..ரத்தபாசம் தேடுது தம்பியை..
  புல்லரிக்குதோ? கேள்விப்பட்டனான்... இனி சொக்ஸ் போட்டுக்கொண்டு போங்கோ புல்லுக்கை போகேக்கை.. இல்லாட்டில் அரிக்கும்.

  உங்கள் வீட்டுக்கு, நம்பி வந்திருக்கிறன், நாக்கை ஆட்டாமல், வாலை வாலை ஆட்டோணும் ஓக்கை???.

  வாழ்க !! வளர்க!!!

  ReplyDelete
 6. அதிராக்கா..அதிராக்கா..நீங்களேதானா? வாங்கோ..நல்வரவு!

  நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த
  இளம்தென்றலாய் ஜீனோஸ் கார்னர் வந்த தங்களை ஜீனோ நான்கு கரம்:) கூப்பி வரவேற்கிறது.

  இப்ப வீக் எண்ட் அல்லவா? அதான் ஜீனோ வீக் எண்ட் மூட்லே இருந்தது![ பிஸி இன் டேகிங் ரெஸ்ட்! ஹி,ஹி!!!] இனி வந்துடும்..தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

  ReplyDelete
 7. //(கவனிக்க.. உங்களச் சொல்லல..)// கர்ர்ரர்ர்ர்...ஓகை படி!! ஜீனோவின் ரசனை நன்றாக இருக்குது என்று (மட்டும்) சொன்னதுக்கு டாங்க்ஸ்!

  நல்ல புள்ள மாதிரி ஜீனன்னே.. என்று கூப்பிடரீங்கள்..ஆனால் ஆதிகாலத்திலேயே அக்காவென்றழைக்க வேணாம் என்று சொன்னவர் நீங்கள்தானே? :D x5

  நன்றி,வணக்கம்!

  ReplyDelete
 8. நதியில் விளையாடி /// ஜீனோ!!! தேம்ஸ் நதியைத் தானே சொல்றீங்கள்... அக்கா நதில விளையாடினா, விதி அக்காவில விளையாடிடும்.

  நாலு கால் தூக்காதீங்கோ...ஜீனோ.. குப்புறவிழுந்திடுவீங்கள்.. ரண்டுகால் தூக்கி வரவேற்றால் போதும்... வரவேற்புக்கு மிக்க நன்றி. அக்காவுக்கு எவ்வளவு அக்கறை பார்த்தீங்களோ தம்பியில்... இதைப் புரியாமல்.....

  ReplyDelete
 9. பப்பி புத்திசாலி என்கிறதை இப்படி கேள்விகளால் வேள்வி நடாத்தித்தானா நிரூபிக்க வேணும். அதான் அப்பப்ப கடிக்கிற கடியிலே தெரியுதே புத்திசாலித்தனம். ;)

  ReplyDelete