Jan 5, 2010

ஜீனோவின் அறிமுகம்

"ஆத்தாடீ, கலிகாலம்னு சொல்றாங்களே, அது இதானோ..ஜீனோவும் ப்ளாக் தொடங்கிடுச்சாமே!! " என்று மூக்கின் மேல்:) விரல் வைத்து அங்கலாய்ப்போர் எல்லாருக்கும் ஜீனோ அண்ணாத்த சொல்லிகிறது என்னதுன்னா...

ஆரும் பயம் படவேண்டாம்! ஜீனோ வலைப்பூ தொடங்கியதன் காரணம் நண்பர்கள் தளங்களிலே பின்னூட்டம் போட்டு கலாய்ப்பதற்கு ஒரு முகவரி தேவைப்படுது அப்படீங்கறது மட்டுமே! இதனால், சகலமானவர்களுக்கும் ஜீனோ சொல்லிக்கொல்வது:) இதுவே..

அனைவரும் வருக! கவலைகள் மறந்து, சிந்திக்காமல் சிரித்துவிட்டு செல்க!

அன்புடன்,
ஜீனோ

22 comments:

 1. அன்பு ஜீனோ :) வருக வருக.. நீங்க அண்ணாத்த இல்லைங்கறது மட்டும் கன்ஃபர்ம்டா தெரியும்.. எப்படி மயில் பண்ண ஜீனோ? மயில் ஐடி தெரியாதே? தெரிஞ்சாலும், இந்த மாதிரி ஊர் பேர் தெரியாதவங்களுக்கெல்லாம் இந்த உஷார் பார்ட்டி (நாந்தேன்) மயில் அனுப்ப மாட்டோம்ல :)

  remove word verification jeeno..

  இந்த அப்பாவி மூஞ்சியயே எத்தன நாளுக்கு காட்டிட்டு இருப்பீங்க ஜீனோ? அந்த கடி மூஞ்சி ப்ளீஸ் :)

  ReplyDelete
 2. also enable comment moderation.. u can remove unnecessary ones

  ReplyDelete
 3. அடேங்கப்பா...உஷார் பார்ட்டி இப்படி சூப்பர் சானிக் வேகத்துல வருவீகன்னு ஜீனோக்கு தெரிலையே!! வாங்கோ எல் போர்ட்..வருக,வருக..நல்வரவு!!!

  ஜீனோ எப்பவுமே அப்பாவிதான்...அதான் டீஃபால்ட் முகம் எப்பவுமே இப்புடி!!

  //எப்படி மயில் பண்ண ஜீனோ? // :) பொறுங்கோ...ஆன்ட்டி வந்து "மயில் செய்முறை" சொல்லுவாங்கள்..அதைப் பார்த்து மயில் செய்யுங்கோ. :)

  //இந்த மாதிரி ஊர் பேர் தெரியாதவங்களுக்கெல்லாம்// இம்புட்டு நாளா தோஸ்த்துங்களா கீறோம்..ஊர் பேர் தெரியாதுன்னு சொன்னா எப்புடி?எப்புடி? எப்புடி?
  ஜீனோவின் முகவரிதான் ஊரறிஞ்ச ரகசியமாச்சே..மயிலு கிட்ட ஜீனோஸ் கார்னர்-னு சொல்லுங்கோ..சும்மா பறந்து வந்துடும்! :):):D

  ReplyDelete
 4. "ஆத்தாடீ, கலிகாலம்னு சொல்றாங்களே, அது இதானோ..ஜீனோவும் ப்ளாக் தொடங்கிடுச்சாமேஏ..!! "

  ஆன்ட்டி வந்தேன். இதோ செய்முறை- மயில் முட்டையைக் காட்டிலிருந்து தேடிப்பிடிச்சு... ஒரு பெட்டியில வைக்கல் பரப்பி .. இருட்டு அறைல, பல்ப் போட்டு வச்சுருங்க. பொரிச்சுரும். எத்தனை நாளில் என்று எல்லாம் கேட்கப்படாது. :)

  //அந்த கடி மூஞ்சி ப்ளீஸ் :) // இப்படி 'படி' வலைல விழுந்துட்டீங்களே பப்பி. படி உங்க ஆட்களை டெரரிஸ்ட்ஸ் என்று சொன்னதை என் காதால் கேட்டேன்.

  சந்தனா, இது ஜீனோ'ஸ் 'பால்டீ' முகம். மற்றப்படி குளிக்காம திரியுறப்ப காப்பிக் கலர்லதான் இருக்கும்.

  ReplyDelete
 5. ஆன்ட்டி, வருக...படிக்கு ரிப்ளை செய்தப்புறம் தான் ஜீனோ அந்த கோரச்சம்பவத்தைக்:) கண்டவர்..
  இட்ஸ் ஓகே, ஜீனோ டேக்ஸ் இட் ஈஸி! :)

  மயில் செய்முறை சூப்பர்! இதை பின்பற்றி எல்போர்டு ஜீனோக்கு மயில் அனுப்பிடுவார் என்று நம்புவோம்!:)

  ReplyDelete
 6. இமா... ஜீனோவும் வந்து திட்டிடுச்சு.. இப்போ சந்தோஷமா? :)

  கோரச் சம்பவம் தான் ஜீனோ.. :(

  மயில் அவன்ல அட காக்க வச்சு பொறிச்சுட்டேன்.. அனுப்பிட்டேன் ஜீனோ.. ஹி ஹி.. வந்ததா?

  ReplyDelete
 7. அவன்லையா!
  கடவுளே எ.கொ.ச.இ!

  ReplyDelete
 8. இமா.. பயம் வேண்டாம்.. நான் சொன்னது வெதுவெதுப்பிற்க்காக.. சில சமயம் மாவு புளிக்க உள்ளே வைப்போம்ல அது போல :)

  ReplyDelete
 9. என்னது, வெதுவெதுப்பா?? அய்யகோ..சூடு பொறுக்காம மயில் முட்டை பாயில் ஆகிட்டதா ஜீனோ கேள்விப்பட்டது..அப்புறம் எப்படி மயில் வரும்? ஆசை காட்டி மோசம் செய்யும் எல்போர்டு...இது நியாயமா? :)

  ReplyDelete
 10. ஜீனோ.. நீங்க முதல்ல உங்க ஒரிஜினல் பேரச் சொல்லி முகத்த காட்டி ஒரு மயில் அனுப்புங்க.. நான் உடனே பதில் மயில் அனுப்பிடறேன்.. சரியா? :)

  ReplyDelete
 11. ரிப்பீட்டேய்!!!

  ***ஜீனோ.. நீங்க முதல்ல உங்க ஒரிஜினல் பேரச் சொல்லி முகத்த காட்டி ஒரு மயில் அனுப்புங்க.. நான் உடனே பதில் மயில் அனுப்பிடறேன்.. சரியா? :)***

  ஜீனோ-க்கு பதிலா சந்தனா-ன்னு படிங்கோ எல்போர்டு!

  ReplyDelete
 12. ம்.. இங்கென்ன பெரிய இழுபறியாக இருக்கு! :D

  மயிலே! மயிலே.!! உன் தோகைக்குப் பதிலா.. உன் முகம் எங்கேயா!! :)

  பப்பி முகத்தோட ஒரு மயில்... கற்பனை பண்ணிப் பார்த்தேன். அழகாத்தான் இருக்கு. :)))

  ReplyDelete
 13. அட அட்லீஸ்ட், நான் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பொண்ணுன்ற அளவுக்காவது, அறுசுவைல கொஞ்சம் பேருக்கு தெரியும்.. உங்களப் பத்தி ஒன்னுமே தெரியலயே ஜீனோ? எந்தவூரு, பொண்ணுதானா னு கூட தெரியலயே???

  ReplyDelete
 14. ம்ம்...உங்க அளவுக்கு இல்லைனாலும் ஜீனோ இஸ் ஆல்ஸோ எ ஹார்ம்லெஸ் க்ரியேச்சர்-னும் அறுசுவைல நிறைய பேருக்கு:) தெரியும்!! ஹி,ஹி!

  ஜீனோக்கு "இந்த பூமிப் பந்து - ஜீனோவின் கூடைப் பந்து! எவ்ரி கண்ட்ரி இஸ் ஜீனோஸ் கண்ட்ரி!"

  ReplyDelete
 15. எப்ப எத கேட்டாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர்னு ஒரு டயலாக் :) அலுத்து போச்சுன்னு இப்போ புதுசா.. //இந்த பூமிப் பந்து - ஜீனோவின் கூடைப் பந்து!//

  சரி, மயில் எல்லாம் கிடக்கட்டும்.. அப்புறம் பாத்துக்கலாம்.. ஏதாவது எழுதுங்க ஜீனோ..

  ReplyDelete
 16. ஜீனோ... எல் போர்ட் சொல்றதைக் கண்டுக்காதீங்கோ... முன்னால எனக்கு எதிரா எவிடன்ஸ் சேர்த்துக் கொண்டு திரிஞ்சாங்க. இப்ப அவங்க வாயாலேயே நான் யங் தான் என்று ஒத்துக் கொண்டு இருக்கிறாங்க. அப்படித்தான் ஒரு நாள் இங்கும் வந்து 'ஜீனோ இஸ் ஏ ரியல் பப்பி,' என்று சொல்லப் போறாங்க. :D

  ReplyDelete
 17. இந்த வீக் ஜீனோ வாஸ் லிட்டில் பிஸி இன் ஆபீஸ் ..அதான் இந்தப்பக்கம் வர முடில..உங்க தொடர் ஆதரவுக்கு:) நன்றி எல்போர்டு! ஜீனோ வில் ரைட் சூன்...

  ஆன்ட்டீ..ஜீனோ இஸ் ஸ்பீச்லெஸ்!:D

  ReplyDelete
 18. //'ஜீனோ இஸ் ஏ ரியல் பப்பி,' //

  இப்ப வரைக்கும் அப்படித்தான் இருக்கு இமா :))) ஜீனோ கிட்ட இதுக்கு எதிரா தான் எவிடன்ஸ் கேட்டுட்டு இருக்கேன் :))

  நன்றி ஜீனோ.. வர வர நம்ம மக்க கிட்ட பேசி பேசி பிசி ன்ற வார்த்தய கேட்டாலே சிரிக்க ஆரம்பிச்சுடறேன் :))

  ReplyDelete
 19. அறிமுகம் சூப்பர்.உங்க அப்பாவி மூஞ்சா இது தான்

  ஜினோ சூரிய குடும்பம் மா ஓஹோ

  சிரிக்க சொன்னீங்களே புவாஹா புவாஹாஹா ஹா ஹி ஹி

  ReplyDelete
 20. அடடே...ஜலீலாக்கா..அவர்தான் ஜலீலாக்கா!
  [அடடே மனோகர்,அவர்தான் மனோகர் -னு ஒரு பாட்டு வரும்..அதே மெட்டுல படிங்கோ படீஸ்! :)]

  வருக,வருக..உங்க சிரிப்பு சத்தம் கேட்டப்புறம் தான் ஜீனோஸ் கார்னர் கலகலன்னு இருக்கு ஜலீலாக்கா..வருகைக்கு நன்றி! அப்பப்ப வந்து உங்க ட்ரேட்மார்க் சிரிப்பை சிரித்துட்டுப் போங்கோ என்று ஜீனோ பணிவன்புடன் கேட்டுக் கொல்கிறது..ஓ..சாரி,சாரி,கொள்கிறது!
  :D :D :D

  ReplyDelete
 21. எவிடன்ஸ்லாம் கேக்கிறது இல்லை சந்தனா, சேர்க்கிறது. :)

  அப்ப நான் கையைத் தூக்கினப்பவே ஆக்செப்ட் பண்ணிட்டுப் போயிட்டே... இருந்திருக்கலாம். எவ்வளவு சிரமப் பட்டீங்க. :)

  ஜீனோ... நான் சந்தனா மாதிரி இல்லை நல்ல'படி'. பப்பி பப்பியாவே இருங்கோ. நான் நானாவே இருக்கிறேன். யார் யாரா இருந்தா என்ன, அது பப்பியா இருந்தாலும் சரி, ரோபோவா இருந்தாலும் சரி எனக்கு நல்ல ஃப்ரென்டா இருந்தா சரிதான். :)

  ReplyDelete
 22. ஜீனோ நானும் வந்துட்டேன்... நலமா? கலக்குரிங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete