ஜீனோவே, ஜீனோக்கு 'ஜீனோ' என்று நாமகரணம் சூட்டிக்கொண்டு ஆறேழு மாதங்கள் கடந்து விட்ட நிலையில், திடீரென ஜீனோவின் மெட்டல் மண்டையிலே :) ஒரு ஞானோதயம்...வீட்டிற்கு ஒரு நிஜ ஜீனோவை வாங்கி வந்து வளர்த்தால் என்னவென்று!
ஒருவழியா மேலிடத்து உத்தரவு வாங்கிட்டு, வீட்டுப் பக்கத்தால இருக்கற பெட் ஷாப்புக்கு போய் சேர்ந்தோம். காரைப் பார்க் பண்ணும்போதே ஒரு சைட் ஹெட்லைட்டு அவுட்டு! சகுனமே சரியில்லைன்னு புஜ்ஜி கிட்ட லைட்டப் பத்தி சொல்லாம கமுக்கமா :) இறக்கி விட்டுட்டு, காரைப் பார்க் பண்ணிட்டு வந்து பாத்தா...புஜ்ஜி இஸ் மிஸ்ஸிங்!
தூக்கி வாரிப் போட, ஜீனோ புயலென பெட் ஷாப்பிற்குள் நுழைகிறார்.. 360டிகிரி சுழலும் தலை இருப்பதும் எவ்வளவு வசதி என்று சிலாகித்தவாறே கண்களைச் சுழற்றுகிறார்..டோரா நிற்குமிடம் ஜீனோவின் வயிற்றிலே புளியைக் கரைக்கிறது.. ஒயிலாக நிற்கும் புஜ்ஜியின் முன்னே ஜீனோவின் வில்லன் பல்வேறு வித்தைகள் புரிந்து டோராவை மயக்கிக் கொண்டிருக்கிறான்!! என்ன ஒரு ஆணவச் சிரிப்பென்று நீங்களே பாருங்கள்!
முதலில் இருந்த கண்ணாடிப் பேழையிலே ரெண்டடி நீள வாலுடைய வித்யாசமான ஒரு எலியை:) டோரா கடந்ததில் ஆச்சரியமில்லை..வில்லன் இருந்த பேழையின் கீழுள்ள பேழையிலே ரெண்டு அப்பாவிப் பூனைகள் உறங்கிக்கொண்டிருக்க..இந்த கருங்குட்டி:) வில்லன் இல்லாத சேட்டைகள் செய்கிறான்!! கண்ணாடியின் இப்புறம் நகரும் நம் விரல்களுடன் ஓடியோடி நடனமாடுகிறான்!
மொத்தத்திலே, புஜ்ஜி 'இஸின்ட் ஹி க்யூட்? லெட்ஸ் டேக் திஸ் கிட்டன்' என்று சொல்லத்தொடங்கியாச்சு!! இந்தப் பூனையாரின் விலை ஜீனோவின் பர்ஸுக்கு ஒரு ஊசி வெடி வைச்ச மாதிரியே இருந்துது! ஹும், நம்ம ஊர்லெல்லாம் பூனையைக் காசு குடுத்து வாங்கிருக்கோம்? எல்லாம் கலிகாலமப்பா!! என்று மனசுக்குள் நொந்தபடியே, 'இப்பத்தானேம்மா உள்ளே வந்திருக்கோம்? மத்தவங்களையும் பாத்துட்டு வருவோம்'-னு நைஸா புஜ்ஜியைத் தள்ளிகிட்டு நகர்ந்தது ஜீனோ.
அப்புறம் வராங்க பைரவர்கள்..டோராவின் முழு உருவமும்:) போய் நின்று பல நிமிடங்களாகியும் அங்கிருந்த பிரவுன்&வொயிட் பைரவர் திரும்பியும் பாக்கலை! கூப்பிட்டாலும் கண்டுக்கலை..முகத்திலே எள்ளும் கொள்ளும் வெடிக்கத் திரும்பிய டோராவின் பார்வை பப்பியின் விலைப் பட்டியலிலே பதிந்தது! அதிகமில்லை ஜென்டில்மேன், புத்தாண்டுத் தள்ளுபடி போக கால் லட்சம் மட்டுமே ! :)
டோராவை கூல் பண்ணுவோம்னு பக்கத்துப்பேழையைப் பாத்தால், மூன்று அழகழகான பூங்குட்டிகள்.. chihuahua குட்டிங்க...அதாங்க, Legally Blonde படத்துல நம்ம ரீஸ் அக்கா:) வளர்ப்பாங்களே அதே ப்ரீட்..ஸோ க்யூட்!!
பட், விலைதான் கொஞ்சம் அதிகம்..ஜோடியா வாங்கினீங்கனா ஒரு விலை..ஆண்பிள்ளை ஒரு விலை..பெண்பிள்ளை ஒரு விலை!!! ஆக மொத்ததுல, கூட்டிக் கழிச்சிப் பாத்தா, ஜீனோ-டோராவின் மாதாந்திர சாப்பாடு பட்ஜெட்டே அந்த அமவுன்ட்டுல பாதிதான்! ஸோ,இதுக்கு மேலயும் அந்த இடத்தில நிற்பது உசிதமில்லைன்னு டோராவை பக்கத்து ரூமுக்கு இழுத்துட்டு போயாச்சு..அங்கே வெள்ளை மட்டும் கருப்பு நிறங்களில் முயல்கள்..ஜீனோ ஏற்கனவே ஒரு மொப்ஸியின் அழகில் மதி மயங்கிட்டார்..ஸோ அங்கேருந்து ஒரு 180டிகிரி டர்ன் அடிச்சால் வாங்குவதாய் ஐடியாவே இல்லாத பச்சைக்கிளிகள்..பஞ்ச வர்ணக் கிளிகள்..பல வண்ணங்களிலே காதல் பறவைகள்!
அதையும் தாண்டி வெளியே வந்தால் மீன்தொட்டிகள்..கலர் கலர் மீன்கள்..டோரா அங்கே சென்றார்..நின்றார்! ஜீனோவுக்கோ பெட்ஷாப்பின் நறுமணம் பொறுக்க முடியாமல் எப்போதடா வெளியே போவோம் என்று துடித்துக் கொண்டிருக்க,டோராவோ மும்முரமா மீனாராய்ச்சி செய்துகொண்டிருக்கு..
கடேசியா டோரா கேட்ட ஒரு கேள்வியில் கடைக்காரி எரிமலையாய்க் கொதித்து கொட்டும் முன் ஜீனோ டோராவை இஸ்த்துக்கினு எஸ்கேப்பு!! :)
அப்புடி டோரா புஜ்ஜி என்ன கேட்டுதுன்னா, 'இதெல்லாம் எடிபிள் பிஷ்-ஆ??' :))))))))))
இதுக்கப்புறமும் ஜீனோ பெட் வாங்கும்னு நினைக்கறீங்க? போதுமடா சாமி,ஆளை விடுங்கோ!!!
எங்க வீட்டுக்கு இந்த ஜீனோவே போதும்!! போதும்!!
ஒரு ப்ளாக் உலகுக்கு ஒரு ஜீனோ போதும்ம். :D
ReplyDeleteபப்பி நல்லா ரீல் விடறார்.
ஹா ஹா.. எடிபிள் ஃபிஷ் :) நல்ல கேள்வி தான்.. நல்ல கதை ஜீனோ.. சரியா சொன்னீங்க இமா.. பப்பி நல்லா ரீல் சுத்துது :)
ReplyDeleteஜீனோ என்ன கிடு கிடுன்னு முன்னேறிட்டீங்க? ம்ம்.. வெரி குட்.. மேல வையுங்க..
ப்ளாக் நல்லாயிருக்கு பப்பி.. தொடர்க.. (என்னயில்ல, எழுதறத)
ReplyDeleteகடைசி போட்டோ சூப்பர் :)
ReplyDelete//பப்பி நல்லா ரீல் விடறார்.//
ReplyDelete//சரியா சொன்னீங்க இமா.. பப்பி நல்லா ரீல் சுத்துது :)//
பொய்..பொய்...பொய் சொல்லாதீங்கோ ரெண்டு பேரும்! பல பேர் சேர்ந்து பல முறை சொன்னாலும் பொய் நிஜமாகாது! ஹஹ்..ஹஹ்..ஹா!
ஆன்ட்டி, இந்த சம்பவம் ஒரு உண்மைச் சம்பவம்..நூற்றுக்கு நூற்றியொரு சதம்:) உண்மை!
எல்போர்டு, மேல வைச்சா கீழே விழுந்துடும்னு ஆன்ட்டி சொன்னாங்க, ஸோ ஜீனோ கீப்ஸ் இன் லேப்டாப் ஒன்லி! ஹி,ஹி,ஹீ!
//தொடர்க.. (என்னயில்ல, எழுதறத)// கிர்ர்ர்...ர்ர்ர்ர்...ர்...கோரச் சம்பவம் அதுக்குள்ளே மறந்துடுச்சா?? ஜீனோ மறுபடி ஞாபகப்படுத்திடும்,சாக்கிரதை! வவ்..வ்வ்..வவ்!
எல்போர்டே நல்லாருக்குன்னு சொன்னப்புறம் என்ன? ஜீனோ இஸ் ரியலி ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி,ஹேப்பி..ஹேஏஏஏ..ஏப்பி!