Jan 21, 2010

சர்தாரின் அம்மாவிடமிருந்து ஒரு கடிதம்..மை டியர் ஜக்ஜித்,
நான் இங்கே ஒரு கிணற்றுக்குள் இருக்கிறேன், அதுபோல் நீயும் அங்கே ஒரு கிணற்றுக்குள் இருப்பாய் என்று நம்புகிறேன்.

நான் இந்தக் கடிதத்தை மெதுவாக எழுதிக்கொண்டிருக்கிறேன்..ஏனென்றால் உன்னால் வேகமாகப் படிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.

நீ இங்கிருந்து கிளம்பும்போது நாம் வசித்த வீட்டை காலி செய்துகொண்டு வந்துவிட்டோம். "நிறைய விபத்துகள் வீட்டிலிருந்து 20 மைல் தூரத்தில்தான் நடக்கிறது" என்று உன் தந்தை பேப்பரில் படித்து தெரிந்து கொண்டதால், நாங்கள் அங்கிருந்து 20 மைல்கல் தள்ளி வந்துவிட்டோம்.

இந்த வீட்டில் குடியிருந்த சர்தார், இந்த வீட்டின் நம்பரை தான் செல்லும் புது வீட்டிற்கு எடுத்துச் சென்று விட்டார்..அங்கே போய் அவர்கள் அட்ரஸ் மாற்ற தேவையிருக்காது என்று எடுத்துப் போய்விட்டார்..அதனால் புதிய அட்ரசை என்னால் இப்போது அனுப்ப முடியாது.

அடுத்த வாரம் நம் பழைய வீட்டின் அட்ரஸ் ப்ளேட் இங்கே வந்து சேர்ந்துவிடும் என்று நம்புகிறேன்..எனவே நம் அட்ரசும் மாற்ற வேண்டியதில்லை.

இங்கே சீதோஷ்ணம் ரொம்ப மோசம் இல்லை. போன வாரம் இரண்டு முறைதான் மழை வந்தது. முதல் முறை 3 நாட்களும், இரண்டாவது முறை 4 நாட்களும்.

வீட்டிலிருந்து நீ அனுப்பச் சொன்ன கோட்-ஐ எடுத்துப் பார்த்தபோது, அதிலிருந்த மெட்டல் பட்டன்கள் மிகவும் கனமாக இருக்கும் உன் அத்தை சொன்னார். எனவே, அந்த பட்டன்களை கட் செய்து கோட்டின் பாக்கட்டில் போட்டு அனுப்பிவிட்டோம்.

உன் அப்பாவுக்கு ஒரு புதிய வேலை கிடைத்திருக்கிறது. அவருக்குக் கீழ் 500 பேர் இருக்கிறார்கள். அவர் ஒரு கல்லறையில் புல் வெட்டும் வேலையில் சேர்ந்திருக்கிறார்.

இன்று காலை உன் தங்கைக்கு குழந்தை பிறந்திருக்கிறது. பையனா பெண்ணா என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை..அதனால் நீ மாமாவா அல்லது அத்தையா என்றும் எனக்குத் தெரியவில்லை.

வேறு முக்கிய விஷயம் எதுவும் இல்லை..இருந்தால் அடுத்த கடிதத்தில் அனுப்புகிறேன்.
-அன்புடன்,அம்மா.

இது ஜீனோக்கு கொசு மெயில்- வந்த ஒரு கடி! ஹி,ஹி!!
தமிழ்
கூறும் நல்லுலகிற்காக ஜீனோ மொழிபெயர்ப்பாளராகப் புது அவதாரமும் எடுத்திருக்கிராராக்கும்! உஸ்..அப்பா..தட்டித் தட்டி காலே,ச்சே..ச்சே, கையே வலிக்குது..கொஞ்சம் தூங்கலாம்!


17 comments:

 1. Good translation work Geno. keep it up. :)

  ReplyDelete
 2. மேலே வைங்கோ ஜீனோ :))

  ReplyDelete
 3. Geno, your manager is coming. WAKE UP!

  ReplyDelete
 4. ஜீனோ நல்லாவே மொழிபெயர்க்குதா?? நன்றீ ஆன்ட்டீ...

  வீட்டுல இருந்த உயரமான பரண் மேல வெச்சுடிச்சி ஜீனோ! நன்றீ எல்போர்டு!

  வாட்? தட்..டட்..பட்..டமால்..டுமீல்!! ஆ..அவ்..அவுச்! எங்கே வாணியக்கா? மேனேஜர் எங்கே ?
  ச்சு..ச்சு..சுகமாய்த் தூங்கிக்கொண்டிருந்த ஜீனோவின் தலையிலே ஒரு வாளி பச்சைத் தண்ணியைக் கொட்டினது போலே எழுப்பிட்டீங்களே?

  அவசரமாய் எழுந்ததிலே, டேபிள் கொர்னரிலே மண்டை இடிச்சு கிரிக்கெட் பால் சைஸ்ல வீங்கிட்டது! இந்தப் பாவம் உங்களை சும்மா விடாது! :) :) :)

  ReplyDelete
 5. வருகைக்கு நன்றி அண்ணாமலையான் அண்ணே & Faizakader அக்கா!!

  கிரிக்கெட் பாலாய் வீங்கிய மண்டைய உங்கள் கருத்துகள் இதமாக வருடிக்கொடுக்குது..நன்றி!

  மிக்க மிக்க மகிழ்ச்சி..அடிக்கடி வாங்கோ என்று தங்களை அன்புடன் ஜீனோ கேட்டுக் கொல்கிறது:) சாரி, சாரி,கேட்டுக் கொள்கிறது!!

  ReplyDelete
 6. ஜீனோ நானும் வந்துட்டேன்... நீங்கலும் டோராவும் நலமா? கலக்குரிங்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. Hi Jeno! Nice Blog...Will come back for complete reading

  ReplyDelete
 8. என்ன பப்பி! இன்னும் எழும்பலையா?? :)

  ReplyDelete
 9. ஹை..ஜீனோஸ் கார்னரிலே நிறைய பழகிய முகங்கள்! [உங்களையும் சேர்த்துதான் ஆன்ட்டீ..ஹி,ஹி!]

  பிரபாக்கா..வாங்கோ..வாங்கோ..வெல்கம்!!

  பாசக்காரப்பய புள்ளையத் தேடிவந்த இலா அக்காவுக்கு ஜீனோவின் வந்தனம்!! உங்க பிரெண்ட்ஷிப் கெடைக்க ஜீனோ ரொம்ப குடுத்து வைச்சிருக்கு இலா அக்கா!! :D x 5

  இலை கணபதியோடு வந்திருக்கும் எஸ்.எஸ்.அக்கா[நன்றி, ஹைஷ் அண்ணே!;)] வாங்கள்! உங்கள் கருத்துக்கு நன்றி!

  //என்ன பப்பி! இன்னும் எழும்பலையா?? :)// அந்தக் கொடுமைய கேக்காதீங்கோ! ஜீனோ தூங்கினாத்தானே ஆன்ட்டி எழும்பரதுக்கு?

  அடிச்சுப் புடிச்சு எழுந்ததிலே கிரிக்கெட் பால் சைஸ்-ல வீங்கின மண்டை இப்பதான் கோல்ஃப் பால் சைஸ் ஆகியிருக்கு!!:(

  ReplyDelete
 10. ஜீனோ!!! இப்ப் நீ எதுக்காக பிட்டு போடறே :))
  உனக்கு இப்ப கடி ஜோக் கந்தசாமின்னு பேர் வச்சுடுவேன்...

  ReplyDelete
 11. இலாக்கா...நீங்க சொன்ன உபதேசங்களை பாலோ பண்ணும் அப்பாவிக்கு பட்டப்பேர் வைப்பது நியாயமா?? :)

  எனிவே, வைக்கறதுதான் வைக்கறீங்க..நல்ல, மாடர்ன் பேரா வையுங்கோ..ஓ..ஓ!!!(நியூமராலாஜி எல்லாம் பாக்க வேணாம்..அதிலெல்லாம் டோரா புஜ்ஜிக்கு naம்பிக்கையில்லையாம்! :D )
  ஆங்கிலப் பேரா இருந்தா பெட்டராம்! [திஸ் இஸ் டோரா'ஸ் ஹம்பிள் ரிக்வஸ்ட்..ஷீ இஸ் பிஸ்ட் ஆப் வித் ஜீனோ'ஸ் நேம்-ஆம்! :D x5 ]

  ReplyDelete
 12. கோச்சுக்கவேணாம்ன்னு சொல்லு.... இன்னுமா டோரா தமிழ் கத்துக்கல... வேணாம் எதுக்கு குடும்பத்துக்குள்ள கொழப்பம் என்னால...what is the matter on Shame shame story ??!!!

  ReplyDelete
 13. enna akkava!! anne geno anna!! thaangala illa aluthuduven:)

  ReplyDelete
 14. //இன்னுமா டோரா தமிழ் கத்துக்கல... // ஹி,ஹி,இலாக்கா..புஜ்ஜி நோஸ் ஒன்லி செலக்டட் வேர்ட்ஸ். எழுத படிக்க தெரியாது! டமிலை இங்க்லீஷா பேசும்.

  எனிவேஸ்.. தேங்க்ஸ் பார் யுவர் அண்டர்ஸ்டேண்டிங். இன்னமோ இங்கிலீஷ்-லையே டைப் பண்ணிருக்கீங்களாம்..அது லேப்டாப்ப தல கீழா புடிச்சு படிச்சாலும் ஜீனோக்கு தெரிலயாம்..புரிலயாம், அதனால அத்த உட்டுடுங்கோ..ஓ..ஓ!!

  என்ன எஸ்.எஸ்,நீங்களும் அக்கா இல்லையா?? ஓகை..ஜீனோ வோன்ட் கால் யு அக்கா..அழுவாதீங்கோ, ஜீனோஸ் கார்னர் ஒன்லி பார் லாஃ பிங்!

  ReplyDelete