Jan 16, 2010

கதை - 2

மக்களே...எல்லோரும் சுகந்தன்னே?? ஜீனோவும் டோராவும் சுகமாயிட்டு இருக்கோம்..

கொறச்சு திவசமா ஜீனோக்கு, மென்னிய முறிக்கிற வொர்க்!! ஆரோ ஜீனோ இங்கே குஷியாயிட்டு ப்ளாக் எழுதிட்டு இருக்கு எண்டு ஜீனோஸ் மேனேஜர் கிட்டக்க போட்டுக் கொடுத்திட்டாங்கள்! ஹும்..என்ன செய்ய, வயத்துக்கு சோறு போடற வேலைய முதல்ல பாக்கறதுதானே சரி? அதாக்கும் ஜீனோ ஒன் வீக்கா இங்க எழுதல்லை.

என்னமோ பெரிய எழுத்தாளர் ரேஞ்சுக்கு ப்ளாக்- ஓபன் செஞ்சாச்சு..கதையெல்லாம் எழுதி பெரீ..ய்ய்.. பில்ட்-அப் கூட குடுத்தாச்சு..நம்ம வாசகர்கள்:), ஜீனோ என்னவோ "ஜெயகாந்தன்"-னு நினைச்சி ஏதாச்சும் எழுதுங்க ஜீனோன்னு வேண்டுகோள் வேற வைக்கறாங்க..

இப்ப என்ன எழுத?எதைன்னு எழுத? அத எப்பூடி எழுத?? சொக்கா..சொக்கா!! ஆப்பசைத்த குரங்கின் நிலையாயிடுச்சே, ப்ளாக் ஓபன் செஞ்ச ஜீனோவின் நிலை?? சரி, ஒரு ஜோக்கு சொல்லி சூழ்நிலைய மாத்திடுவோம்.


அது ஒரு வகுப்பறை..அஞ்சாப்பு. ஒரு பையன் [ ஜீனோ மாறியே:)] லேட்டா கிளாசுக்கு வரான்..சயின்ஸ் கிளாஸ் நடந்துட்டு இருக்கு. [உங்க ஸ்கூலையே ஸ்ட்ரிக்ட்டான டீச்சர இமேஜின் பண்ணிக்குங்கோ :)] பையன் [ரெட்டைவால் ரெங்குடு- சுருக்கமா ரெ.ரெ.] பயத்தோட எக்ஸ்யூஸ் கேக்கிறான். டீச்சரும் அவன உள்ள கூப்பிட்டு விசாரிக்கறாங்க.

டீச்சர் : ஏண்டா பயலே லேட்டு?
ரெ
.ரெ.: மி..மி..மிஸ், அது வந்து..வந்து வர வழில அப்பா சைக்கிள் பஞ்சராயிடுச்சு மிஸ்...அதான்!!
டீச்சர்
: வரது லேட்டு..பேச்சு மட்டும் வாய் கிழியப் பேசு.. எங்கே உன் ஹோம் வொர்க் நோட்டு..எடு முதல்ல!
ரெ
.ரெ.: நேத்து புல்- எங்க ஏரியால கரண்ட் கட் மிஸ்..அதனால ஹோம் வொர்க் பண்ணல மிஸ்!!
டீச்சர்
: [கோபம் அதிகரித்த குரலில்] ..ஹோம் வொர்க் குடுத்தா பண்ணறதில்ல, கிளாசுக்கு வரதும் லேட்டு..படிக்கறதும் இல்ல..என்னடா பையன் நீ?? சரி,சரி இங்கே வா..நான் கேக்கற கேள்விக்கு பதில் சொல்லு..வா!!
ரெ
.ரெ.: [இப்போது ரெ.ரெ.-க்கு பயம் போய் ரெட்டைவால்த்தனம் தலைதூக்கிட்டது ] சொல்லுங்க மிஸ்!!
டீச்சர்: [புத்தகத்தில் இருக்கும் ஒரு பறவையின் உடலை மறைத்துக் கொண்டு அதன் காலை மட்டும் காட்டி] இந்தக் காலைப் பாத்து இது என்ன இனத்தைச் சேர்ந்த பறவைன்னு சொல்லுடா ரெட்டை வாலு!!
ரெ.ரெ.: பறவையைப் பாக்காம எப்படி மிஸ் கண்டுபுடிக்க முடியும்?!!
டீச்சர்
: தொணத் தொணன்னு பேசாம என்ன பறவை இனம்னு சொல்லுடா..[ டீச்சருக்கு 10ஷன், பி.பி. எல்லாம் எகிறுது!]
ரெ
.ரெ.: தெரில மிஸ்!
டீச்சர்
: [காதில் புகை வர..]இவனுங்களோட ரோதனையாப் போச்சு..நோ ஹோம் வொர்க்..நோ சின்சியாரிட்டி..நோ ரெஸ்பக்ட் டு டீச்சர்...ஒரு மண்ணும் தெரியறதில்ல! வளர்ப்பே சரியில்ல..டேய்,முதல்ல உங்கப்பாவ நாளைக்கு கூட்டிட்டு வா...உங்கப்பா பேரென்னடா?
ரெ
.ரெ.: மிஸ் ..என் காலைப் பாத்து எங்கப்பா பேரைக் கண்டுபிடிங்க!!
டீச்சர்
: ????!!!???!!!


இது ஜோக் நம்ம நண்பரொருவர் உபயம்...அவர் சும்மா மைல்டா சொன்ன ஜோக்க ஜீனோ கொஞ்சம் உப்பு-மொளகாப்பொடி தூவி ஸ்பைசியா குடுத்திருக்கு. ஓகே,ரெடி! ஒன்..டூ..த்ரீ.. எங்கே எல்லாரும் சிரிங்க! புவஹா..ஹா..ஹா..ஹ்..ஹா!புவஹா..ஹா..ஹா..ஹ்..ஹா!புவஹா..ஹா..ஹா..ஹ்..ஹா!

5 comments:

  1. வேற வழி. :)

    பாவம்பா ஜலீலா, விட்ருங்க. :)

    ம்ம்... பப்பி நல்லாவே சிரிக்கிறார். :)

    ReplyDelete
  2. //பாவம்பா ஜலீலா, விட்ருங்க. :)// ஆன்ட்டீ..இதென்ன புதுக்கதை!! ஜலீலாக்காவின் சிரிப்பு ஜீனோக்கு ரொம்ப புடிச்சிருக்கு..ஸோ ஜீனோ ஆல்ஸோ ஸ்டார்ட்டட் லைக் திஸ்!! தட்ஸ் ஆல்!!

    இதுக்குதான் ஜீனோ முன்பே சொல்லிருக்கு..ஜீனோஸ் கார்னர்-ல ஆரும் சிந்திக்கக் கூடாது..சிரிக்க மட்டும்தான் செய்யணும்!!

    ReplyDelete
  3. ஜலீலா சிரிப்பு எனக்கும்தான் பிடிக்கும்.

    சரி.. சரீ... இனிமேல் சிந்திக்கல. :) சிரிப்பு மட்டுமே.
    ஓகே! :D :D

    ReplyDelete
  4. இந்தப் பப்பியும் ப்ளாக் எழுதுமா!

    ப்ளாக் நல்லாத்தான் இருக்கு ஜீனோ.
    ஜீனோவின் அறிமுகம், எழில் முகம், கடி முகம் எல்லா முகத்தையும் விட இந்த சிரி முகம் அழகாக இருக்கிறது.

    j-புனிதா

    ReplyDelete
  5. வருக புனிதா அவர்களே..நல்வரவு!!

    தனிக்குடித்தனம் வந்த சகோதரிகள்:) ஆரும் ஜீனோவைக் கண்டுக்கலை..புதியவரான தாங்கள் ஜீனோஸ் கார்னரைக் கண்டுபிடித்து வந்து, பின்னூட்டமும் தந்திருக்கிறீர்!! ஹும்...ஊம்...ஜீனோவிற்கு ஆனந்தக் கண்ணீர் பெருகுகிறது!!

    ஆன்ட்டீ.. ஒன் ரிசூ..:) ப்ளீஸ்!! [பெட்டர், ஒரு ரிசூ பேக்டரி ஓபன் செய்துவிடுங்கோ..வர வர எல்லா ஆக்களுக்கும் ஆனந்தக் கண்ணீர் வெள்ளம் கரை புரண்டோடுது..:) ]

    தங்கள் வருகைக்கும், பதிவுக்கும் நன்றியோ நன்றி j-புனிதா!!
    :D :D: :D :D :D :D :D

    ReplyDelete