1 .இடம் - சினிமா தியேட்டர்
சிச்சுவேஷன் -நண்பர்கள்/ தெரிந்தவர்களை அங்கே பார்க்கறீங்க..அப்போது
கேள்வி :- ஹே....நீங்களா?...நீங்க இங்கே என்ன பண்ணறீங்க?
பதில்:- :உனக்குத் தெரியாதா...ரொம்ப நாளா நான் இங்கே ப்ளாக்-ல டிக்கட் விக்கறேன்.
2 . இடம் - நெரிசல் மிக்க பேருந்து
சிச்சுவேஷன் - பாயின்ட்டட் ஹை ஹீல் ஷூ போட்ட, பிந்துகோஷ் சைஸ்-ல இருக்கும் ஒரு அம்மணி, உங்க கால நல்லா 'நச்'சுன்னு ஒரு மிதி வைச்சிட்டு..
கேள்வி :- அச்சசோ..சாரிங்க, தெரியாம மிதிச்சுட்டேன்..வலிக்குதா?
பதில் :- ச்சே..ச்சே..இல்லைங்க..நான் பாதத்துக்கு லோக்கல் அனஸ்தீஷியா போட்டிருக்கேன்..வேணும்னா, இன்னொரு முறை மிதிங்களேன்..வலிக்குதான்னு பாப்போம்!

3 . இடம் - கல்லறையில் ஒருவரை அடக்கம் செய்யும் தருணம்
சிச்சுவேஷன் - அழுதழுது கண் சிவந்து மூஞ்சி வீங்கிப் போன ஒருவர்...கடவுளிடம்..
கேள்வி :- ஏன்..ஏன்?? இத்தனை பேர் இருக்கும்போது இவரை உன்னோடு அழைத்துக் கொண்டீர் இறைவனே?
பதில் :- அவருக்குப் பதிலா கடவுள் உங்களை அழைத்துக்கொண்டிருக்கணுமா??
4 . இடம் - ஹோட்டல்
சிச்சுவேஷன் - வெயிட்டர்கிட்ட ஆர்டர் கொடுக்கும்போது
கேள்வி :- 'பனீர் பட்டர் மசாலா' டேஸ்ட் நல்லா இருக்குமாப்பா உங்க ஹோட்டல்-ல?
பதில் :- இல்லங்க..ரொம்ப கேவலமா இருக்கும்..சிமென்ட்,செங்கல் எல்லாம் போட்டுதான் செய்வாங்க..
5 . இடம்- ஒரு பேமிலி கெட்-டு கெதர்..
சிச்சுவேஷன் -தூரத்து சொந்தக்கார ஆன்ட்டி உங்களை வெகு
கேள்வி :- அடடே..முன்னா, நீ ரொம்ப பெருசா(!!??) வளர்ந்துட்டியே?
பதில் :- ஹி.ஹி..ஆமாம் ஆன்ட்டி..நீங்களும் கொஞ்சம் கூட சுருங்காம (??!!)அப்படியே இருக்கிங்களே?
6 .சிச்சுவேஷன் -உங்கள் தோழி தனக்கு கல்யாணம் முடிவாகி இருப்பதாக கூறுகிறார்..அப்போது நீங்க கேக்கறீங்க..
கேள்வி:- நீ கல்யாணம் பண்ணிக்கப்போற மாப்பிள்ளை நல்லவரா??
பதில்:- இல்ல..அவன் ஒரு புத்தியிலாத, பொண்டாட்டிய கை நீட்டி அடிக்கற கபோதியாம்..அதெல்லாம் எனக்கு முக்கியமில்ல,அவன் நல்ல பணக்காரன்! அது போதும்.
7 . இடம் :- பெட் ரூம்
சிச்சுவேஷன் - நடுராத்திரி..ஒரு போன் கால் வரும் சத்தம் கேட்டு முழிக்கறீங்க..
கேள்வி:- சாரி.. எழுப்பிட்டேன் போல இருக்கு..தூங்கிட்டீங்களா?
பதில்:- நான் தூங்கிட்டிருந்தேன்னு நினைச்சிட்டீங்களா? நீங்க ஒரு லூசுங்க! இந்த ஆப்ரிக்கா பழங்குடி மக்கள் கல்யாணம் பண்ணிக்கராங்களா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தேன்..

8 . சிச்சுவேஷன் - சொட்டைத் தலை/ போனி டெய்ல் / வெரி ஷார்ட் ஹேர் இருக்கும் உங்க நண்பர்/நண்பியிடம் ..
கேள்வி :- ஹேர்-கட் பண்ணிட்டு வந்திருக்கீங்களா?
பதில்:- இல்ல..இப்ப இலையுதிர்காலம்தானே? நானும் கொஞ்சம் முடி உதிர்த்துகிட்டு இருக்கேன்.
9 . இடம் - டென்டல் கிளினிக்
சிச்சுவேஷன்- டென்டிஸ்ட் உங்க வாய்க்குள்ளே எதையோ வைச்சு குத்தப் போறார்..
கேள்வி:- இத வைச்சு உங்க சொத்தைப்பல்லை கிளீன் பண்ணப்போறேன்..வலிச்சிதுன்னா சொல்லுங்க
பதில் :- இல்ல டாக்டர்..வலிக்கவே வலிக்காது..ரத்தம் மட்டும்தான் வரும்.
10 . இடம் - கேஃபடீரியா
சிச்சுவேஷன்- நீங்க ஜாலியா ஸ்மோக் பண்ணிட்டு இருக்கும்போது உங்க அழகான கேர்ள் ப்ரென்ட் வந்து..
கேள்வி:- நீங்க ஸ்மோக் கூடப் பண்ணுவீங்களா?ஹைய்யோ..எங்கிருந்து வாரங்க,இப்புடி கேள்வி கேக்கறவங்க எல்லாம்??
பதில் :- ஓ..மை காட்! இது என்ன அதிசயம்? ஒரு சாக்பீச வெளையாட்டா வாயில வைச்சிருந்தேன்..இப்போ அது புகையுதே!
ஓகை..லைப் இஸ் கூல் ..காம் டவுன் ஜீனோ..காம் டவுன்!

ஜீனோ என்ன பாட்டு கேக்கரார்னு:) பாக்கறீங்களா? வெயிட் எ மினிட் பார் பைவ் மினிட்ஸ்..அது அடுத்த பதிவில்...