Apr 16, 2010

சின்ன சின்ன வாத்து..

சின்ன சின்ன வாத்து..சிங்கார வாத்து!
அங்குமிங்கும் ஓடுது தன் அம்மாவை விட்டு!
அம்மா பேச்சை கேக்காத சின்ன வாத்து..
ஒய்யாரமா சிறகை விரித்து பறந்து வந்தது!
காத்திருந்த பருந்தோ பறந்து வந்தது..
சின்ன வாத்தைக் கொத்தி செல்ல விரைந்துவந்தது!

அம்மா வாத்து ஓடிவந்து சண்டை போட்டது!

தோற்றுப் போன பருந்தோ ஓடிப் போனது!
சின்ன சின்ன வாத்து..சிங்கார வாத்து!


இந்தப்பாடல் பெங்களூரிலே சில காலம் பணி நிமித்தம் ஜீனோ தங்கியிருந்த பொழுது ரூம் மேட்டாகத் தம்பியிருந்த ஒரு தம்பி பாடிக்காட்டியது.(தம்பி என்றால் பள்ளிக்கு போகும் அளவு சிறிய பையனில்லை..எங்கள் ரூமிலே இருந்த நண்பர்களிலே இளையவர். பிரபல சாப்ட்வேர் கம்பெனியிலே ஆணி பிடுங்கும் வேலையிலே கம்பஸ் ரெக்ரூட்டாகச் சேர்ந்தவர்.)

அப்ப இருந்தே ஜீனோக்கு இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். ஓய்வு நேரங்களிலே இந்தப் பாடலை அபிநயத்துடன் பாடிக்காட்டும் அந்த சின்னத் தம்பி இப்பொழுது எங்கிருக்கார் என்று தெரியவில்லை..
நாட்டை விட்டு வெளியே வந்தால் சில நாட்களுக்கு அனைத்து நண்பர் உறவினருடனும் தொடர்பு இருக்கிறது..நாட்கள் செல்லச்செல்ல இந்த நட்பு வட்டம் குறுகிவிடுகிறது..உறவினர்களும் அப்படியே! பெற்றோர்கள் தவிர ஒரு சிலருடன் மட்டுமே தொலைபேசலும் தொடர்கிறது. ஹூம்..ஊரிலே கவலை இல்லாமல் துள்ளித் திரிந்த அந்தக் காலமும் திரும்பி வருமோ?

"ஆனா இப்போ இங்க இன்னொரு உலகம்... வலையுலகம், நட்பு வட்டம், உறவு வட்டம் பெருகிக் கொண்டே வருதே. ;)))
இங்க உரிமையோட 'கர்ர்ர்ர்' சொல்லலாம். 'வவ்' சொல்லலாம். ;) சமாதானமாகலாம். ;)) " கரெக்ட் ஆன்ட்டி..தக்க சமயத்திலே நல்ல வார்த்தை சொன்னீங்கள். டாங்க்ஸ்..ஸீ,நவ் ஜீனோ ஷோஸ் இட்ஸ் ஹேப்பி ஃபேஸ்!

ஓக்கை கய்ஸ்..தேங்க்ஸ் பார் தி சப்போர்ட் யா..ஸீ யா..மீ யா!!! :D:D:D:D

16 comments:

 1. ஹூம்.....ஊரிலே... அந்தக் காலமும் திரும்பி வருமோ!!!! ;( ;( போங்க ஜீனோ. நிஜத்துல நட்பு வட்டம் குறுகி வருதோ என்று கவலையாத்தான் இருக்கு. ;( இப்பூடித்தான் இப்போ நிலவரம். ;) ஊர்ல இருந்தாலும் இப்பூடித்தான் இருக்கும் போல. எல்லாரும் அவசர அவசரமா எங்கயோ ஓடிட்டிருக்காங்க.

  ஆனா இப்போ இங்க இன்னொரு உலகம்... வலையுலகம், நட்பு வட்டம், உறவு வட்டம் பெருகிக் கொண்டே வருதே. ;)))
  இங்க உரிமையோட 'கர்ர்ர்ர்' சொல்லலாம். 'வவ்' சொல்லலாம். ;) சமாதானமாகலாம். ;))

  ம்... ஒரு பாசமான ஆன்ட்டி இருக்கேன் உங்களுக்கு. அதிராக்கா டவல் தருவாங்க. கண்ணை தொடச்சுக்கோங்க. பிரியமா ஒரு அண்ணே, இலாக்கா.. எத்தனை பேர் இருக்கோம்! சீயா மீயா. சியர்ஸ் ப்ளீஸ். ;) சிரிங்கோ. ;)

  ReplyDelete
 2. பாட்டும்,புகைப்படமும் அருமை.ஜினோ ஆசியா அக்காவை மறந்தாச்சுன்னு பட்சி சொல்லுது.

  ReplyDelete
 3. ஸ்வீ...ட் பப்பி. அழ...கு பப்பி. ;)

  அட அட அட! ரெண்டு கால்ல அவார்ட தூக்கிட்டு... எல்லாம் அன்பு சகோவுக்காகவா!!! அதிஷ்டம் செய்த சகோ. ;)

  ReplyDelete
 4. Geno.. i did not know you are putting up a vaathu post. I am a vathu fan... i have 3 in my house.. the previous 3 were taken away by visiting little kutties... this time my marumgan wanted them.. i said keep replacement and take what you want :)) where can i send pics .... you know my id send me test mail...

  feelings vidaatheyy... mudiyalai :))

  ReplyDelete
 5. //you know my id send me test mail...// Sariyaath theriyathu,but Geno will try sending u a mail ila akkaa..see yaa,mee yaa!

  ReplyDelete
 6. ஜீனோ,
  என்ன இது? அவார்டை வச்சுக்கன்னு தான் சொன்னேன். அதுக்காக இப்படியா? கால் வலிக்கப் போகுது. பாவம் ஜீனோ!

  அச்சோ!!! அந்த குட்டி வாத்து ரொம்ப அழகு. எங்க வீட்டு ஃபவுண்டனில் விட்டு வளர்க்க ஆசையா இருக்கு.

  இலா,
  வாத்து வளர்ப்பது சுலபமா? ஒண்ணும் பிரச்னை இல்லையா? நான் ரொம்ப நாளாக வாத்து வேணும்னு கேட்டுகிட்டு இருக்கேன். அப்பா வாங்கித் தர மாட்டேங்கிறார்:-(

  ReplyDelete
 7. என்னாச்சு ஜீனோன்னே? ஏனிப்படி?

  ரொம்ப அனுபவிச்சு எழுதியிருக்கீங்க.. மேல வையுங்க.. பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் கோலம் ஜீனோ.. வேறென்ன சொல்ல? நாங்களெல்லாம் இருக்கோம் இப்போதைக்கு.. பீ ஹாப்பி..

  அப்புறம், கேட்டவுடனே வந்து குரைச்சதுக்கு நன்றி ஜீனோ.. ஜீனோவின் குரைப்பெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே :)))

  நல்லா எழுதறீங்க.. தொடர்ந்து எழுதுங்க.. முடிஞ்சா வாத்துப் பாட்ட எங்களுக்கும் பாடிக் காட்டுங்க என்ன?? :))))

  ReplyDelete
 8. ஜீனோ.... தம்பி ஜீனோஓஓஓஓஓஓஓ.. வெளியில வாங்கோ... அக்கா உள்ளே வரமாட்டேன் ரோட்டிலதான் நிற்கிறேன்.. கெதியா வந்து பாருங்கோ... அக்கா பேபியாக இருக்கேக்கையே... நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்குக் கொண்டுபோய், வீக்கு வீக்கெனக் கத்தக்கத்த காதுகுத்திப்போட்டினம். அதுபோதாதென அக்காக்கு புத்திவந்ததும்(கவனிக்கவும்) தானாகவே இன்னும் ஒருதடவை குத்தினவ. இப்ப போய் நீங்க குத்தப் பார்க்கிறீங்களே.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். அதுக்கு(எதுக்கெனக் கேட்கப்படாது கர்ர்ர்ர்ர்ர்) நியூ ஆண்ட்ரி பக்கவாத்தியம் வாசிக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஆரும் குறுக்க பேசப்படாது.. நான் இப்ப சரியான கோபத்தில இருக்கிறேன்.... கூல் டவுண் அதிரா கூல் டவுண்... ஓகே ஓகே... இமா டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

  ReplyDelete
 9. ஜீனோஓஓஒ.. அக்கா சொன்னமாதிரியே அயகா அவோட்டைத்தூக்கிவச்சுக்கொண்டு போஸ் குடுக்கிறீங்கள் சூப்பர்... கால் உழைஞ்சால் கீழ வச்சுப்போட்டு, பூஸ்ட் குடிச்சுப்போட்டு, திரும்பவும் தூக்குங்கோ ஜீனோ ஓக்கை? அடுத்த அவோட் கிடைக்கும்வரையும் உங்கட நிலைமை கவலைக்கிடம்தான்... அக்காவாலயும் ஒண்டும் செய்யேலாம் எல்லோ இருக்கு..

  ReplyDelete
 10. திருத்தம்....

  அக்காவாலயும் ஒண்டும் செய்யேலாம் எல்லோ இருக்கு..//// ஒண்டும் செய்யேலாமல்....

  ReplyDelete
 11. //ஜீனோவின் குரைப்பெனும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே// ஆஹா!! என்னே இனிமை. ;)

  //நயினாதீவு நாகபூசணி அம்மன் கோயிலுக்குக் கொண்டுபோய், வீக்கு வீக்கெனக் கத்தக்கத்த காதுகுத்திப்போட்டினம்.// அதுதான் எல்லாத்திலையும் 'வீக்'கா இருக்கிறீங்கள் போல. ;)

  //அக்காக்கு புத்திவந்ததும்(கவனிக்கவும்)// ம்... கவனிக்கிறம்ம்ம். ;))) ஆனால் ஆமோதிக்கத் தான் ஏலாமல் கிடைக்கு (எதை எனக் கேட்கப்படாது)
  //தானாகவே இன்னும் ஒருதடவை குத்தினவ.// ஐயஹோ!! இதென்ன கொடுமையா இருக்கு!! பாவமே!!
  //அதுக்கு(எதுக்கெனக் கேட்கப்படாது// கேக்க மாட்டமே நாங்கள். ;)
  // பக்கவாத்தியம் வாசிக்கிறா// என்ன சொல்லுறீங்கள்!!!! நானே இப்ப ஒரு பக்க வாத்தியம் (மிருதங்கம்) மாதிரி ஆகிப் போனன். ;( ஒரு பக்கம் மொப்பியும் மற்றப் பக்கம் பப்பியும் போட்டு 'டமார் டுமார்' என வாலால அடிக்கிறீங்கள் என்னை.

  //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். ஆரும் குறுக்க பேசப்படாது.. நான் இப்ப சரியான கோபத்தில இருக்கிறேன்.... கூல் டவுண்// இமா //கூல் டவுண்... ஓகே ஓகே...// அதிரா //டிஷ்யூ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.// ;))

  நல்ல வேளை, மொப்பி பப்பியை 'பூட்ஸ்' குடிக்கச் சொல்லேல்ல. ;)

  ReplyDelete
 12. //நாட்டை விட்டு வெளியே வந்தால் சில நாட்களுக்கு அனைத்து நண்பர் உறவினருடனும் தொடர்பு இருக்கிறது..நாட்கள் செல்லச்செல்ல இந்த நட்பு வட்டம் குறுகிவிடுகிறது..உறவினர்களும் அப்படியே! பெற்றோர்கள் தவிர ஒரு சிலருடன் மட்டுமே தொலைபேசலும் தொடர்கிறது. ஹூம்// correctuthaan jeeno...;(

  ReplyDelete
 13. சாரி கய்ஸ்..சாரி பார் தி லேட் ரிப்ளை யா! டாங்க்ஸ் எவ்ரி ஒன் பார் ஸ்பெண்டிங் யுவர் வேல்யூவபில் டைம் அட் ஜீனோஸ் கொர்னர்.

  ReplyDelete
 14. i hve looked at this and it looked really good and i will go on this alot more often thankyou zoe...

  ReplyDelete