
இன்னாதான் மனுஷங்களா இருந்தாலும் உங்களுக்கு இப்போ ஜீனோ சொல்லப்போற தத்துவம்ஸ் அல்லாம் புடிக்கும்!! கடேசி வரைக்யும் படியுங்கோ..ஓக்கை?

டாக்ஸ் லாஜிக்:
எப்பயுமே ஒரு பைரவருக்கு நெறைய ப்ரெண்ட்ஸ் இருப்பாங்க..எதனாலன்னா, அது நாக்கால பேசறத விட வாலால:) பேசறதுதான்!!

ஒரு பப்பியோட கிஸ்-க்கு மின்னாடி எந்த சைக்யாரிஸ்ட்டும் ஜெயிக்க முடியாது.

இந்த உலகத்துல தன்னை விட உன்னை அதிகம் நேசிக்கும் ஒரே ஜீவன்...யுவர் பைரவன்!!

ஒரு சராசரி மனுஷனை விட நல்ல குணம் கொண்டது ஒரு சராசரி பைரவர்.

உங்க டாக் குண்டா இருக்குன்னா இன்னா அர்த்தம்னா, நீங்க தேவையான எக்சர்சைஸ் பண்ணறதில்ல...ஹி,ஹி!!

துன்னரதுக்கு சோறு இல்லாம கஷ்டம் படர டாக்-க்கு நீங்க சாப்பாடு போட்டு காப்பாத்தி கரை சேத்தினீங்கன்னா...அது உங்கள கடிக்காது,உங்களுக்கு குழி பறிக்காது,உங்கள ஏமாத்தாது..இதான் மனுஷனுக்கும் டாகுக்கும் இருக்கற இம்பார்டன்ட் டிபரன்ஸூ !!

ஒரு பைரவரே உங்களோட முழு வாழ்க்கை இல்லை..ஆனா டாக்ஸ் உங்க வாழ்க்கையை முழுமையடைய செய்யும்.

டாக்சுக்கு கவுன்ட் பண்ணத் தெரியாதுன்னு நினைக்கறீங்களா?ஒண்ணு பண்ணுங்கோ..உங்கோ பாக்கட்ல மூணு பிஸ்கோத்து வைச்சுக்குங்கோ..
டாகுக்கு ரெண்டே ரெண்டு பிஸ்கோத்து மட்டும் போட்டு டெஸ்ட் பண்ணுங்கோ..

லேடீசும் கேட்ஸ்ம் ஒரே மாரிங்கோ..அவிங்களுக்கு இன்னா புடிக்குமோ,அதான் செய்வாங்கோ..ஜென்ட்ஸ் அண்ட் டாக்ஸ் பெட்டர் சிட் பேக் அண்ட் ரிலாக்ஸ்..அவங்க அப்புடித்தான்னு பழகிடோனும்!! (தாய்க்குலமே,டேஷன் ஆவாதிங்கோ,அல்லாம் ஒரு டமாசுக்குதான? புவஹா..ஹா..ஹா!!)

மீ த ஜீனோ த எஸ்ஸ்ஸ்ஸ்..ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்...ஸ்ஸ்ஸ்ஸ்..கேப்பு!!