
அங்குமிங்கும் ஓடுது தன் அம்மாவை விட்டு!
அம்மா பேச்சை கேக்காத சின்ன வாத்து..
ஒய்யாரமா சிறகை விரித்து பறந்து வந்தது!
காத்திருந்த பருந்தோ பறந்து வந்தது..
சின்ன வாத்தைக் கொத்தி செல்ல விரைந்துவந்தது!
அம்மா வாத்து ஓடிவந்து சண்டை போட்டது!
தோற்றுப் போன பருந்தோ ஓடிப் போனது!
சின்ன சின்ன வாத்து..சிங்கார வாத்து!

இந்தப்பாடல் பெங்களூரிலே சில காலம் பணி நிமித்தம் ஜீனோ தங்கியிருந்த பொழுது ரூம் மேட்டாகத் தம்பியிருந்த ஒரு தம்பி பாடிக்காட்டியது.(தம்பி என்றால் பள்ளிக்கு போகும் அளவு சிறிய பையனில்லை..எங்கள் ரூமிலே இருந்த நண்பர்களிலே இளையவர். பிரபல சாப்ட்வேர் கம்பெனியிலே ஆணி பிடுங்கும் வேலையிலே கம்பஸ் ரெக்ரூட்டாகச் சேர்ந்தவர்.)
அப்ப இருந்தே ஜீனோக்கு இந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். ஓய்வு நேரங்களிலே இந்தப் பாடலை அபிநயத்துடன் பாடிக்காட்டும் அந்த சின்னத் தம்பி இப்பொழுது எங்கிருக்கார் என்று தெரியவில்லை.. நாட்டை விட்டு வெளியே வந்தால் சில நாட்களுக்கு அனைத்து நண்பர் உறவினருடனும் தொடர்பு இருக்கிறது..நாட்கள் செல்லச்செல்ல இந்த நட்பு வட்டம் குறுகிவிடுகிறது..உறவினர்களும் அப்படியே! பெற்றோர்கள் தவிர ஒரு சிலருடன் மட்டுமே தொலைபேசலும் தொடர்கிறது. ஹூம்..ஊரிலே கவலை இல்லாமல் துள்ளித் திரிந்த அந்தக் காலமும் திரும்பி வருமோ?

இங்க உரிமையோட 'கர்ர்ர்ர்' சொல்லலாம். 'வவ்' சொல்லலாம். ;) சமாதானமாகலாம். ;)) " கரெக்ட் ஆன்ட்டி..தக்க சமயத்திலே நல்ல வார்த்தை சொன்னீங்கள். டாங்க்ஸ்..ஸீ,நவ் ஜீனோ ஷோஸ் இட்ஸ் ஹேப்பி ஃபேஸ்!
